மேலும் அறிய
Advertisement
Vadakkupatti Ramasamy: "நன் படத்துல வர்ற பேய் மாதிரி இருக்கும்" - சந்தானம் கலகல!
Vadakkupatti Ramasamy: “ படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க காரணம் கவுண்டமணி தான். படத்தின் இயக்குநர் கவுண்டமணி ரசிகர்” என்று கூறினார் சந்தானம்.
Vadakkupatti Ramasamy: தனது படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க கவுண்டமணி தான் காரணம் என்று படத்தின் ஹீரோவான நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
வடக்குப்பட்டி ராமசாமி:
சந்தானம் நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் வரவேற்பை பெற்று வருகிறது. டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, நிழல்கள் ரவி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டைட்டிலுக்கு எதிர்மறை கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் சந்தானம் பதிலளித்தார். அதில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஹீரோயினுடன் காதல் காட்சிகள் பெரிதாக இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம், “ஹீரோயின் உடன் எந்த காட்சிகளும் வைக்கவில்லை. அதை தான் நானும் டைரக்டர்கிட்ட கேட்டேன்” என்றார். மேலும் நிகழ்ச்சி மேடையில் படத்தின் ஹீரோயின் கருப்பு நிறை ஆடை அணிந்து வந்திருந்தார். அதை பார்த்த சந்தானம், இந்த கருப்பு ஆடையை வேறு யாராவது போட்டு இருந்தால் நன் படத்தின் பேய் மாதிரியே இருக்கும். ஆனால், இவர் போட்டு இருப்பதால் அழகா இருக்கு என்றார்.
கடவுளை வைத்து காசு பார்ப்பது தவறு:
தொடர்ந்து பேசிய அவர், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வைத்து காசு பார்ப்பது தவறு. கடவுள் பெயரை வைத்து அரசியல் மற்றும் பிரச்சனை பண்ணுவது தவறு. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. நான் ஆன்மீகவாதி. வடக்குப்பட்டி ராமசாமி படத்தை நாத்திகர் மற்றும் ஆத்திகர் என இருவரும் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு படத்தின் இயக்குநர் கார்த்திக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.
மேலும், படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி பெயர் வைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க காரணம் கவுண்டமணி தான். படத்தின் இயக்குநர் கவுண்டமணி ரசிகர். நானும் கவுண்டமணி ரசிகர். டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்டவை கவுண்டமணியின் காமெடிகள். அதன் அடிப்படையில் தான் படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதற்கும் ஈவேரா வுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion