J.Baby Trailer: படம் பார்க்க அம்மாவை கூட்டிட்டு வாங்க.. ரசிகர்களை கவர்ந்த ஜே.பேபி ட்ரெய்லர்!
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஜே.பேபி”. இந்த படத்தில் ஊர்வசி கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஜே.பேபி”. இந்த படத்தில் ஊர்வசி கதையின் நாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டவர்களும் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் மாரி இயக்கியுள்ள ஜே.பேபி படம் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதன் கடைசியில் மார்ச் 8 ஆம் தேதி இந்த படத்தை காண உங்கள் அம்மாவை அழைத்து வாருங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஊர்வசியின் செயல்களால் ஏற்படும் தொல்லைகளை தாங்க முடியாமல் அக்கம் பக்கத்தினர் குடும்பத்தினர் முறையிடுகின்றனர்.
காவல்துறை வரை பிரச்சினை சென்ற நிலையில் கோபத்தில் அவரை தாக்கி திட்டி மகன் அட்டகத்தி தினேஷ் வெளியே தள்ளி விடுகிறார். இதனால் வீட்டை விட்டு வெளியேறும் ஊர்வசியை மீண்டும் அழைத்து வர வேண்டும் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. தன் அம்மாவை தேடி இரு மகன்கள் அலைவதும், அதன் பரிதவிப்பும் என ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர்க காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதையில் நகைச்சுவையை புகுத்தி இப்படத்தின் மூலம் இயக்குநராக சுரேஷ் மாரி அறிமுகமாகிறார். சென்சாரில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் ஜே.பேபி படம் சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. இதனைப் பார்த்த பல பிரபலங்கள் சுரேஷ் மாரியையும், இயக்குநர் பா.ரஞ்சித்தையும் பாராட்டு தள்ளினர். குறிப்பாக நடிகர் பிரஷாந்த் பாராட்டியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரின் தயாரிப்பில் அடுத்த சிறந்த படைப்பாக ஜே.பேபி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

