த்ரிஷா கிட்ட வச்சுக்காதீங்க..இதுவரை பேசி மாட்டிக்கொண்டவர்கள் யார் ?

Published by: ராகேஷ் தாரா

தன்னைப் பற்றி யாராவது அவதூறு பரப்பும் விதமாக பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டார் த்ரிஷா. அப்படி தன்னைப் பற்றி தப்பாக பேசி அவர்களின் மீது த்ரிஷா சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அண்மையில் விஜய் முதலில் த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார். அவர் பேசியதை கண்டித்து த்ரிஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்

கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னாள் ஆதிமுக பிரமுகர் ஏவி ராஜூ த்ரிஷாவை பற்றி ஆபாசமாக கருத்து பகிர்ந்தார். இதற்காக ஏவி ராஜூ மீது த்ரிஷா மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.

லியோ படத்தில் த்ரிஷாவுடன் ரேப் சீன் இல்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மன்சூர் அலிகானின் கருத்தை வன்மையாக கண்டித்து த்ரிஷா பதிலளித்தார். இனிமேல் மன்சூல் அலிகானுடன் பணியாற்ற மாட்டேன் என்றும் த்ரிஷா தெரிவித்தார்.

2010 ஆம் ஆண்டு த்ரிஷாவுக்கு நைஜீரிய போதை கடத்தல்காரருடன் த்ரிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டது. தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக த்ரிஷா அந்த ஊடகத்தின் மேல் வழக்குத் தொடர்ந்தார்

2005 த்ரிஷாவின் ஆபாசமாக மார்ஃப் செய்யப்பட்ட படங்களை பிரபல இதழ் வெளியிட்டது. இந்த இதழுக்கு எதிராக த்ரிஷா மற்றும் அவரது அம்மா இருவரும் வழக்குத் தொடர்ந்தனர்.