மேலும் அறிய

பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி- Light Weight Baby ' என்ற தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 

போட்டிகள் ஏராளமாக உள்ள உடற்பயிற்சிக்கான ஃபிட்னஸ் உலகத்தை பின்னினியாகக் கொண்ட இப்படம்-  பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. காதல்- குடும்பம்- எதிர்பார்ப்புகள்- தனிப்பட்ட லட்சியங்கள் -ஆகியவை மோதிக் கொள்ளும் வகையில் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. நகைச்சுவை, உணர்வு பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான போட்டிகள் நிறைந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

ஸ்டாண்ட்- அப் காமெடியனாகவும், 'பிக்பாஸ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவராகவும் பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரே இப்படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். அவருக்கு ஜோடியாக உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் நன்கு அறியப்பட்ட ஆரத்தி கிருஷ்ணா நடிக்கிறார். இது அவருக்கு அறிமுக திரைப்படமாகும். முற்றிலும் மாறுபட்ட பின்னணியை கொண்ட இந்த ஜோடி - படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போதே... பார்வையாளர்களிடத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 

கே. சி. குரு ( K.C.Guru)  எழுதி, இயக்கும் இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் ( Hitha Studios) நிறுவனம் தயாரிக்கிறது. சாகரா சந்தேஷ் ( Sagara Sandesh) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவாளராக பிரமோத் கோட்டியன் - இசையமைப்பாளராக சரவணன் சுப்பிரமணியம் - படத்தொகுப்பாளராக ஹரிஷ் கொம்மே மற்றும் வசனகர்த்தாவாக 'விக்கல்ஸ்' விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

படத்தைப் பற்றி இயக்குநர் கே சி குரு தெரிவித்ததாவது....

''கடந்த 45 நாட்கள் ஒரு அற்புதமான பயணமாக அமைந்தன. ஒவ்வொரு படப்பிடிப்பு கட்டமும்... ஒவ்வொரு நகரமும்... இப்படத்திற்கு தனித்துவமான சிறப்பம்சங்களை சேர்த்தன. முற்றிலும் மாறுபட்ட உலகங்களை சேர்ந்த இருவரை பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கிய இந்த கதை... தற்போது நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படும் ஒரு படைப்பாக உருவெடுத்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், பட தொகுப்பு அறையில் மற்றொரு உற்சாகமான கட்டம் தொடங்குகிறது. இந்த கதாபாத்திரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்''.

நாயகன் 'விக்கல்ஸ்' விக்ரம் தெரிவித்ததாவது..

''எனது திரை பயணத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தது மிகவும் உற்சாகமான அனுபவங்களில் ஒன்றாகும். நடிப்பதுடன் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது இந்த பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. கேமராவிற்கு முன்னாலும் ...அதே சமயம் எழுத்து வடிவிலும்... ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது அரிதான ஒன்று. இந்த அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்''.

ஆரத்தி கிருஷ்ணா தெரிவித்ததாவது...

''ஃபிட்னஸ் என்பது எனக்கு எப்போதும் உடல் ரீதியான சவாலாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் நடிப்பு என்னை உணர்வு ரீதியாக முற்றிலும் புதிய வழிகளில் சவாலுக்கு உட்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்குள் இருந்த வேறொரு பரிமாணத்தை கண்டறிய உதவியது. எனது முதல் மற்றும் முக்கியமான இந்த திரைப்படத்தை இவ்வளவு மறக்க முடியாத அனுபவமாக மாற்றி அமைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன். பார்வையாளர்கள் இப்படத்தை பார்ப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்".

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக் குழுவினர் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். லைட் வெயிட் பேபி - Light Weight Baby ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். இப்படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget