Trisha: அடுத்த படத்தில் பிஸியான திரிஷா! மதுரையில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்
மதுரையில் தனது அடுத்த சினிமாவின் ஷீட்டிங்கை தொடங்கியிருக்கிறார் நடிகை திரிஷா!
தமிழ் சினிமாவில் இவருடன் இணைந்து நடிக்காத ஆட்களே இல்லை என்ற அளவிற்கு பிரபலமானவர். தன் தெளிவான தமிழ்ப் பேச்சாளும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் அரசியானவர். மெளனம் பேசியதே படத்தில் தொடங்கிய திரிஷாவின் கதாநாயகி திரைப்பயணம் கில்லி, மன்மதன் அம்பு, 96, பேட்டை உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்களின் படங்களிலெல்லாம் நடித்திருக்கும் அனுபவம் வாய்ந்த நடிகை.
கோலிவுட்டில் ரொம்பவே பிஸியான நடிகை என்றால் திரிஷாதான். இவர் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரமும் திரிஷாவின் பெயர் சொல்லும் அளவுக்கு பிரபலம். இவர் நடித்த படம் வெற்றியோ, தோல்வியோ, ஆனால், அந்தப்படத்தில் எப்போதும் திரிஷாவின் பர்பாமன்ஸ் அதிகம் பேசப்படும் வகையில் தன் நடிப்பு திறமையால் மிரட்டியிருப்பார், திரிஷா.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். சமீபத்தில், இவர் நடித்து வெளியான ‘96’ படம் இவருக்கும் மேலும் புகழைத் தேடித் தந்தது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை தரிசனத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
— Trish (@trishtrashers) April 25, 2022
இப்போது, திரிஷாவின் அடுத்த திரைப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கிவிட்டது என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும்.
நடிகை திரிஷா, அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் (Arun Vaseegaran.) இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கு ‘தி ரோட்’ (The Road) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கதை பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் கதைக்களம் மதுரையை மையமாக கொண்டதால், படத்தின் ஷுட்டிங் மதுரையில் தொடங்கியுள்ளது. ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள் இண்டர்நெட்டில் பரவி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் மதுரையில் 50 நாட்களுக்கு நடைப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகை திரிஷா உடன், குக் வித் கோமாளி பிரபலம். சர்பாட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் ( Santhosh Prathap) ஷபீர் (Shabeer) மியா ஜியார்ஜ் (Miya George) மற்றும் எம்.எஸ். பாஸ்கர் (MS Bhaskar) போன்றோர் இணைந்து நடிக்கிறார்கள்.
Actress #TrishaKrishnan's Next Project 💐#TheRoad#Trisha #MiaGeorge #MSBaskar #DancingRoseShabeer #SanthoshPrathap #VelaRamamoorthy #DiamondBabuPRO pic.twitter.com/EicqNlpueV
— SSS || FANDOM OF AJITH (@FandomOfAK) April 25, 2022
தி ரோட் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ்.( Sam CS) இசையமைக்கிறார். கே.ஜி. வெங்கடேஷ்(KG Venkatesh) ஒளிப்பதிவு செய்கிறார். நங்கூரன் (Nagooran) படத்தொகுப்பு செய்கிறார். திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டெட்ஸ் குறித்து படக்குழுவினர் தங்கள் சமூக வலைதளங்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் திரிஷா தனது முதல் வெப் சீரிஸின் ஷூட்டிங்கை முடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திரிஷா நடிப்பில் உருவான ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ‘தி ரோட்’ திரைப்படத்தின் கதை என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்