மேலும் அறிய

Trisha: 17 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் த்ரிஷா

தென்னிந்திய குயின் த்ரிஷா விரைவில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய குயின் த்ரிஷா விரைவில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் லியோ. தளபதி விஜயுடன் இணைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இந்த படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைப்பிரபலங்கள் அதிகப்படியானோர் இணைந்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃப்ர்ஸ் லுக் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேறபைப் பெற்றுள்ளது.  

அதற்கு முன்னர், நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப்பக்கத்தில், லியோ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகர் விஜயுடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிகை த்ரிஷா தனது கதாப்பாத்திரத்தினை மிகச்சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றார். மேலும், பொன்னியின் செல்வன், லியோ என ஏற்கனவே தென்னிந்திய சினிமாவே த்ரிஷாவைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, புதிய தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 

இந்நிலையில், தென்னிந்திய குயின் என வர்ணிக்கப்படும் நடிகை த்ரிஷா தனது அடுத்த படத்தில், தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரான, மெகா ஸ்டார் சிரஞ்சிவியுடன் ஒரு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மெகாஸ்டார் சிரஞ்சீவி சில நாட்களுக்கு முன்பு பங்கர்ராஜூ இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவுக்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. த்ரிஷா மற்றும் சிரஞ்சீவி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2006ஆம் ஆண்டு வெளியான ஸ்டாலின் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். 


Trisha: 17 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் த்ரிஷா

அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு,  ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியுடன் இணையும் வாய்ப்பு த்ரிஷாவிற்கு கிடைத்தது. அவரும் அந்த படத்தில் இணைவதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் த்ரிஷா படத்தில் இருந்து விலகினார். அப்போது அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில், ”சில நேரங்களில் சில விஷயங்கள் ஆரம்பத்தில் சொன்னது மற்றும் முடிவு செய்யப்பட்டதிலிருந்து வேறுபட்டதாக மாறும். கதை வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி சாரின் படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆச்சார்யா படக்குழுவிற்கு நல்வாழ்த்துக்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தார். 

ஏற்கனவே த்ரிஷா 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜயுடன் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகை த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடிக்கிறார். விஜய் மற்றும் த்ரிஷா கடந்த 2008-ஆம் ஆண்டு குருவி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget