Trisha Jayam Ravi: பொன்னியின் செல்வனுக்காக அங்கீகாரத்தை இழந்த த்ரிஷா, ஜெயம் ரவி - அதிரடி ஆக்ஷனில் ட்விட்டர்!
ப்ரொமோஷன் பணிகளுக்காக பெயர் மாற்றி ப்ளூ டிக் நீக்கப்பட்டதை அடுத்து, தற்போது த்ரிஷா மீண்டும் ட்ரிஷ் என தன் பழைய பெயருக்கு மாறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் 2 பட ப்ரொமோஷன் பணிகளில் நடிகை த்ரிஷா,ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
ப்ளூ டிக் பறிப்பு
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 ப்ரொமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக ட்விட்டர் தளத்தில் தங்கள் கதாபாத்திர பெயர்களான குந்தவை, அருண்மொழி வர்மன் என நடிகை த்ரிஷாவும் நடிகர் ஜெயம் ரவியும் முன்னதாக மாற்றியுள்ளனர்.
இதனால் இவர்களது ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது த்ரிஷா, ஜெயம் ரவி இருவரது ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் படக்குழுவினர் நேற்று முன் தினம் (ஏப்.15) சென்னையில் ஆந்தம் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நிலையில், நேற்று சென்னை - கோவை பயணித்து அங்கு ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
த்ரிஷா - ஜெயம் ரவி பேச்சு
பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் பணிகளின்போது த்ரிஷாவிடம் தொடர்ந்து ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக சென்னையில் அப்பறம் பேசலாம் எனக் கூறி தவிர்த்தார் த்ரிஷா.
நேற்று நிகழ்ந்த ப்ரொமோஷன் பணிகளின்போது தான் லியோ பட ஷூட்டிங்கில் இருந்து தான், தான் வந்திருப்பதாக த்ரிஷா தெரிவித்திருந்தார். மேலும் லியோ படம் குறித்து பின்னர் பேசலாம் என்றும் கூறினார்.
அதேபோல் நேற்று கோவை ப்ரொமோஷன் பணிகளின்போது பேசிய ஜெயம் ரவி, “மணிரத்தினத்தின் நாயகன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இருவர் படம் மணிரத்தினத்தின் படத்தில் எனக்கு பிடித்த படம். இப்படத்தில் நெவர் கிவ் அப் ஆட்டிட்யூட் என்பது பூங்குழலியிடம் பிடிக்கும். வந்தியதேவனின் நம்பிக்கை எனக்கு பிடிக்கும்.இதுவா இதுவா என்று கேட்டு மயக்கிட்டு போய்ட்டே இருப்பாங்க த்ரிஷா” என கலகலப்பாகப் பேசினார்.
இந்நிலையில் ப்ரொமோஷன் பணிகளுக்காக பெயர் மாற்றி ப்ளூ டிக் நீக்கப்பட்டதை அடுத்து, தற்போது த்ரிஷா மீண்டும் ட்ரிஷ் என தன் பழைய பெயருக்கு மாறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ப்ரொமோஷன்
கோவையைத் தொடர்ந்து டெல்லி, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, திருச்சி மீண்டும் சென்னை என தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
நேற்று கோவைக்கு விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் விமானத்தில் வந்திறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் டூருக்கு மத்தியில் நடிகர் விக்ரம் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், விக்ரமின் பிறந்தநாள் புகைப்படங்களை லைகா பகிரும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
மேலும் படிக்க: அயோத்தி ஹீரோயினை நமக்கு முன்னாடியே தெரியுமா... இவங்களா இது...? மீண்டும் ட்ரெண்டாகும் பழைய வீடியோ!