Trichy Sadhana: கியா கார் கேட்ட சாதனா... சம்பவம் செய்த கணவர்... சூர்யவம்சம் சின்ராசை மிஞ்சிய டயலாக் வீடியோ!
யேய்... போமா... அங்கிட்டு... கியா காரு குயா காருன்னு.. முதல்ல உனக்கு நான் கார் வாங்கித் தாறேன்னு சொன்னேனா?
திருச்சி சாதனா செய்யும் சேட்டைகளை நாம் அறிந்திருப்போம். சக யூடியூப்பர்கள் கார் வாங்கி கடுப்பேற்றியதால், திடீரென கார் வாங்கும் ஆசை வர, புதன் கிழமை விதை நெல்லு வாங்க புறப்பட்டுக் கொண்டிருந்த கணவரிடம், திடீரென வந்து, ‛எனக்கு கார் வேண்டும்... அதவும் கியா கார் வேண்டும்’ என அடம்பிடித்த சாதனாவிற்கு என்ன நேர்ந்தது தெரியுமா? இதோ அவர்களின் உரையாடல்...
சாதனா: எனக்கு கார் வேணும்... யூடியூப் நடத்துற எல்லாரும் கார் வாங்குறாங்க. எனக்கு கார் வேணும்.
கணவர்: ஏய்... என்ன நெனச்சுட்டு இருக்க... அரை கிலோ கறி வாங்கிட்டுவாங்கிற மாதிரி கார் கேட்குற.
சாதனா: எல்லாரும் கார் வாங்குறாங்க... கார் வாங்கித்தானு சொன்னா உனக்கு என்ன?
கணவர்: எல்லாரும்னா யார் வாங்குறா?
சாதனா: யூடியூப்காரங்க எல்லாரும் தான்!
கணவர்: ஆம்பள பசங்க கார் வாங்குறாங்க... ஓட்டுறாங்க... உனக்கு என்ன! உனக்கு தான் அழகா அரசாங்க பஸ் விட்டுருக்கு. லோக்கல்ல மினி பஸ் இருக்கு. நல்லா ஜன்னல் ஓரத்துல ஜாலியா உட்கார்ந்துட்டு போன் பேசிட்டே பேசிட்டு போகலாம். அது உனக்கு செஃப்பிட்டியாவும் இருக்கும். அதை விட்டுட்டு... கார் வாங்கு கார் வாங்குனா... அதுக்கு டிரைவருக்கெல்லாம் யார் தீனி போடுறது.
சாதனா: இங்கே பாரு... கார் வாங்கித் தருவீயா... மாட்டீயா? நான் டிரைவிங் க்ளாஸ் போய் கத்துகிட்டு, நானே ஓட்டுறேன். எனக்கு டிரைவரெல்லாம் தேவையில்லை.
கணவர்: எனக்கு வேலை ஆரம்பிக்கட்டும்... நான் ஒரு கார் பார்த்திருக்கேன்.
சாதனா: என்ன காரு?
கணவர்: எல்லா இந்திய சாலையையும் வலம் வந்த காரு... வல்லுநர் எல்லாம் ஓட்டுன காரு... பார்த்திருக்கேன்; காட்றேன்
சாதனா: எனக்கு அந்த காரெல்லாம் வேணாம்...
கணவர்: வேறு எந்த கார் வேணும்...?
சாதனா: எனக்கு அந்த கியா காரு... இன்னோவா காரு... அப்புறம் பார்த்தீங்கனா....
கணவர்: யேய்... போமா... அங்கிட்டு... கியா காரு குயா காருன்னு.. முதல்ல உனக்கு நான் கார் வாங்கித் தாறேன்னு சொன்னேனா?
சாதனா: எனக்கு வாங்கித்தா சும்மா விளையாடிட்டு இருக்காத! இரண்டு நாள்ல கார் வேணும். எனக்கு அசிங்கமா இருக்கு, வெளியே போக.
கணவர்: விளையாட்டெல்லாம் இல்லை... எந்த காசு நம்மட்ட இருக்கு?
சாதனா: கடன்ல வாங்கு... மாசம் மாசம் டியூ கட்டு.
கணவர்: டியூ போட்டா மாசம் மாசம் இங்கே வந்து கடன் காரன் உட்கார்ந்திருவான். யார் கடன் கட்டுறது. நீ வாங்குறது உன் மேக்கப்புக்கே சரியா போகுது. அதை வாங்கு, இதை வாங்குனா... எப்படி வாங்குறது. நான் வாங்கித் தர்றேன் வெயிட் பண்ணு.
சாதனா: யேய்... போ... அதெல்லாம் முடியாது வாங்கு... ஷோ ரூம்ல இருக்கு. வாங்கு மாசம் மாசம் டியூ கட்டிக்கலாம்.
கணவர்: கடன் சும்மா கொடுப்பாங்களா... சொத்து காட்டணும். எந்த சொத்தை காட்டுறது...? எப்போ எதை வாங்கனும்னு எனக்கு தெரியும்... அடி பிச்சுப்புடுவேன்..’’
என, பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் சாதனாவின் கணவர். ஏமாற்றத்தில், கடுப்போடு வீட்டுக்குள் நுழைகிறார் சாதனா.