Flashback: திருப்பூர் குமரனின் மனைவியை மயங்க வைத்த சிவாஜி... நம்பியார் சொன்ன நவரசம்!
'என் புருஷன் முகமே எனக்கு மறந்து போச்சு. என் சின்ன வயதிலேயே அவர் செத்துட்டாரு. சிவாஜி நடிச்சப்போ, என் புருஷன்தான் செத்துட்டாரு ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டேன்' என்றார் அவர்.
திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் திருப்பூர் கஜலட்சுமி தியேட்டரில் திரையிடப்பட்ட 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தைப் பார்க்க விரும்பினார். அந்தப் படத்தில் சிவாஜி, திருப்பூர் குமரனாகச் சில நிமிடங்கள் நடித்திருப்பார். குமரன் இறந்து விழும் காட்சியில், அவர் நடிப்பு தத்ரூபமாக இருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்த ராமாயி அம்மாள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். பிறகு கேட்டபோது, 'என் புருஷன் முகமே எனக்கு மறந்து போச்சு. என் சின்ன வயதிலேயே அவர் செத்துட்டாரு. சிவாஜி நடிச்சப்போ, என் புருஷன்தான் செத்துட்டாரு ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டேன்' என்றார் அவர்.
ராமாயி மட்டுமா?
சிவாஜியுடன் நடித்த வில்லன் நடிகர் நம்பியார் போன்றோரும் சிவாஜி நடிப்பில் சொக்கி போனவர்கள்.1968 ல் வெளி வந்த படம் சிவாஜி நடித்த எங்க ஊர் ராஜா. இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்தது. தனது காட்சிகள் எடுத்து முடிந்த பிறகு ஓய்வு நேரத்தில் தனது நண்பர்களுடன் நம்பியார் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சிவாஜி கணேசன் மேக்கப் அறைக்கு சென்ற நேரத்தில் நம்பியாரை பார்த்து பவ்யமாக வணக்கம் சொன்னார். ஒரு மணி நேரம் கழித்து ஜமீன் தார் வேடத்தில் சிவாஜி வெளியே வந்தார். அப்போது நம்பியாரை ஒரு கர்வமாக பார்த்தபடி படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளார். இதை பார்த்த நம்பியாரின் நண்பர்கள் " பார்த்தீர்களா அண்ணே... வரும்போது சிவாஜி உங்களை பார்த்து பவ்யமாக வணக்கம் சொன்னார். இப்போது கர்வமாக பார்த்து விட்டு போகிறாரே" என்றனர். அதற்கு நம்பியார் " அவர் வரும்போது சாதாரண கணேசனாக வந்தார். இப்போது மேக்கப் போட்டவுடன் படத்தின் கதை படி , ஜமீனாக மாறி விட்டார். அதனால் தான் அவர் நடிகர் திலகம் என்கிறார்கள்" என்று சொல்ல நண்பர்கள் அமைதியாகி விட்டனர்....
சிவாஜிகணேசனின் பிறந்த நாள் இன்று அக்டோபர் 1 !
நடிகர் திலகம் சிவாஜி தொடர்பான மேலும் செய்திகளுக்கு...
ஏன் கொண்டாடப்பட்டார் சிவாஜி... நாடி நரம்பெல்லாம் நடிப்பு ஏறிய மகா கலைஞன்!#Actorsivajiganesanbirthday #sivajibirthdayhttps://t.co/JNWzAEGK6A
— ABP Nadu (@abpnadu) October 1, 2021
சகாப்தத்துக்கு மரணமில்லை ...சிவாஜியின் பிறந்தநாளை கொண்டாடிய கூகுள் டூடுல்!#Actorsivajiganesanbirthday #googledoodlehttps://t.co/fIXjTIvUBM
— ABP Nadu (@abpnadu) October 1, 2021