Thunivu Promotion: ‘நல்ல படத்துக்கு ப்ரோமோஷன் தேவையில்லை’; அப்ப துணிவு நல்ல படம் இல்லையா?.. கலாய்த்து தள்ளும் விஜய் ரசிகர்கள்!
“நல்ல படங்களுக்கு ப்ரோமோஷன் தேவையில்லை.” என்று அஜித்தின் மக்கள் தொடர்பாளரான சுரேஷ் சந்திரா பதிவிட்ட பழைய ட்வீட்டை எடுத்து விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித்தின் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் புர்ஜ் கலிஃபா மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ஆகிய இடங்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. நேற்று, படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியானது. அதில், ஸ்கை டைவிங் செய்யும் கலைஞர்கள் சிலர், ஹெலிகாப்டரில் இருந்து குதித்து துணிவு படத்தின் போஸ்டரை வானத்தில் பறக்கவிட்டனர். அந்த போஸ்டரில், “31 ஆம் தேதி டிசம்பர் - துணிவு டே ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது; அந்நாளில் டீசர் வருமா..? ட்ரெயலர் வருமா..? அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சி நடைபெறுமா..? என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது, துணிவு படத்திற்கான ப்ரோமோஷன் புர்ஜ் கலிஃபா மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ஆகிய இடங்களில் பிரமாண்டாமாக வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.விக்ரம் படத்தின் ட்ரெய்லரை அங்கு வெளியிட்டது போல், துணிவு படத்தின் ட்ரெய்லரை அங்கு வெளியிடவுள்ளனர் என்ற பேசப்பட்டு வருகிறது.
View this post on Instagram
எப்போதும், துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில்தான் இது போன்ற,ப்ரோமோஷன்கள் நடைபெறும். ஆனால், துணிவு படத்தின் ப்ரோமோஷன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் நடக்கவுள்ளது என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது; இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் வெளிவந்த பின், அஜித்தின் மக்கள் தொடர்பாளரான சுரேஷ் சந்திராவின் பழைய ட்வீட்டை எடுத்து விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த ட்வீட்டில் சுரேஷ் சந்திரா, “நல்ல படங்களுக்கு ப்ரோமோஷன் தேவையில்லை. ” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Appo Thunivu Kuppai padam thane pic.twitter.com/57N5LFJdcy
— Hᴀʀɪꜱʜᴹᵃᶠᶦᵃ ʰᵉᵃᵈ 💫🔥 (@PeakedVijay) December 26, 2022
இந்த ட்வீட்டை ஷேர் செய்து, ப்ரோமோஷன் தேவையில்லை என்று சொன்னீர்கள். இப்போது ஏன் துணிவுக்கு பயங்கர ப்ரோமோஷன் செய்து வருகிறீர்கள் என்றும், வாரிசு படத்துடன் போட்டி போடுகிறீர்களா என்றும் அப்போது துணிவு படம் நல்ல படம் இல்லையா என்றும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அத்துடன், பீஸ்ட் படத்தை விட வாரிசு படத்தின் மேல விஜய்க்கு அதிக நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜயின் நடவடிக்கையில் அப்பட்டமாக தெரிகிறது என்ற கருத்தை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்திவருகின்றனர்.





















