Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!
Thug Life: மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக் லைஃப்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
![Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்! Thug Life release update official announcement made to release by the end of this year Thug Life: தக் லைஃப் ரிலீஸ் அப்டேட்.. இந்த வருஷம் மட்டும் 3 படங்கள்.. கமல் ரசிகர்ளுக்கு காத்திருக்கும் ட்ரீட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/08/eadf4265fc5e2d6eecff3347a46ed4341715172856428224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. திரிஷா, அபிராமி, சிம்பு, நாசர், வையாபுரி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் இப்படம் குறித்த அப்டேட் அவ்வபோது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
ரிலீஸ் தேதி :
அந்த வகையில் மே 8ஆம் தேதி 'தக் லைஃப்' படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. 'தக் லைஃப்' திரைப்படம் நடப்பாண்டு இறுதியில் வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
துல்கர் சல்மான் - ஜெயம் ரவி :
இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லபட்ட நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினார்கள். நடிகர் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு இணைந்துள்ளார். கமல்ஹாசன் மகனாக சிம்பு நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவி நடிக்கும் கதாபாத்திரத்துக்கு பதிலாக நடிகர் அசோக் செல்வன் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அடுத்தடுத்த ரிலீஸ் :
கமல் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஸ்பெஷல் ட்ரீட் அடுத்தடுத்து காத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' படத்திற்கு பிறகு படு ஸ்ட்ராங்கான ஒரு கம்பேக் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கலக்கி வருகிறார். அந்த வகையில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ஷங்கரின் 'இந்தியன் 2' திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக தயாராகி வருகிறது. அதே வேலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.
ஹாட்ரிக் படங்கள் :
எனவே இந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் மூன்று படங்கள் வெளியாக உள்ளன என்பது அவரின் ரசிகர்களுக்கு பன்மடங்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 'தக் லைஃப்' படத்தின் ஷூட்டிங் மிகவும் தீவிரமாக தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடிந்ததும் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)