'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தக் லைஃப்‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை(17.05.25) வெளியாகிறது.

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், நாளை வெளியாகும் ட்ரெய்லருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைஃப்‘ படத்திற்கு எதிர்பார்ப்பு
பொதுவாகவே, மணிரத்னம் இயக்கும் திரைப்படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும், உலக நாயகனுடன் அவர் கூட்டணி சேர்ந்தால், அந்த படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அதிலும், 1987-ல் வெளியான நாயகன் படத்திற்கு பிறகு, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணையும் படம் இது.
அந்த வகையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, சன்யா மல்ஹோத்ரா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்‘ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்னேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘ஜிங்குச்சா‘ பாடல்
‘தக் லைஃப்‘ படத்தின் முதல் பாடலான ‘ஜிக்குச்சா‘ பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. கல்யாண சீக்குவன்ஸ் பாடலாக உருவாகியுள்ள அதில், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் நடனமாடியுள்ள நிலையில், அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
‘தக் லைஃப்‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை(17.05.25) வெளியீடு
‘தக் லைஃப்‘ திரைப்படம் ஜூன் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.
ஏற்கனவே வெளியான படத்தின் ‘ஜிங்குச்சா‘ பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், ட்ரெய்லருக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை வெளியாகும் படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களை நிச்சயம் கவரும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















