This week Movie Release: ஒன்னு புதுசு.. ஒன்னு ரீ-ரிலீஸ் .. இந்த வாரம் வெளியாகும் 2 தமிழ் படங்கள்!
ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளிக்கிழமை என்றாலே என்னென்ன புதுப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தான் இருக்கும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுகள் நடைபெற்றும் வரும் நேரத்திலும் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் படங்கள் என்னவென்று பார்க்கலாம்.
ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளிக்கிழமை என்றாலே என்னென்ன புதுப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தான் இருக்கும். ஆனால் தற்போது மக்களவை தேர்தலும், ஆண்டு பருவத் தேர்வுகளும் வந்து விட்டதால் பல பெரிய படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டது. இப்படியான நிலையில் இந்த வாரம் தமிழில் ஒரு புதுப்படமும், ஒரு ரீ-ரிலீஸ் படமும் வெளியாகிறது.
ரபெல்
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “ரெபல்”. இந்த படத்தில் கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைய மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கியுள்ளார்.
சுதந்திர வீர சாவர்க்கர்
சுதந்திர போராட்ட வீரரான வீர சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு படம் Swatantra Veer Savarkar என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ரந்தீப் ஹூடா இப்படத்தை இயக்கியுள்ளதோடு அவரே சாவர்க்கர் கேரக்டரிலும் நடித்துள்ளார். இதற்காக உடல் எடை குறைந்த மெலிந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். அங்கிதா லோகேண்டா, அமித் சியால், மார்க் பென்னிங்டன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது.
சிட்டு 2020
ரேவதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிட்டு 2020 என்ற புதுமுகங்கள் நடித்த படமும் வெளியாகிறது. இப்படம் நீண்ட காலத்துக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதை ட்ரெய்லர் வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
அழகிய தமிழ்மகன்
ரீ-ரிலீஸ் வரிசையில் இந்த வாரம் நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் வெளியாகிறது. பரதன் இயக்கிய இப்படத்தில் விஜய் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்தார். மேலும் ஸ்ரேயா, நமீதா, சந்தானம், கஞ்சா கருப்பு என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அழகிய தமிழ் மகன் மீண்டும் வெளியாகிறது.
Om Bheem Bush (தெலுங்கு)
ஸ்ரீ ஹர்ஷா கொனுகண்டி இயக்கத்தில் பிரியதர்ஷினி புலிகொண்டா, ஸ்ரீ விஷ்ணு, ராகுல் ராமகிருஷ்ணா நடிப்பில் வெளியாகும் படம் Om Bheem Bush. இந்த ஒரு கிராமத்திற்கு புதையலைக் கண்டுபிடிக்க வரும் மூன்று விஞ்ஞானிகளை பற்றி காமெடியாக எடுக்கப்பட்டுள்ளது.