Madhavan Next Movie: மாதவனை இயக்கப்போகும் திருச்சிற்றம்பலம் இயக்குனர்..! அட செம அப்டேட்..!
திருச்சிற்றம்பலம் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் மாதவன் புதிய பாடத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். குடும்ப கதையாக வெளியான இந்த படம் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார்.
திருச்சிற்றம்பலம் வெற்றியைத் தொடர்ந்து மித்ரன் ஜவஹர் புதிய படமொன்றை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார். இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தகவலை மித்ரன் ஆர் ஜவஹரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய திரையுலகின் பிரபல நடிகரான மாதவன் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் பிரபலமான நடிகர் ஆவார். அலைபாயுதே மூலம் தமிழில் அறிமுகமான மாதவன் சாக்லேட் பாயாக ஏராளமான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதிச்சுற்று படம் மூலமாக தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். பின்னர், விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்த விக்ரம் வேதாவும் மாஸ் ஹிட் அடித்தது.
After the blockbuster success of Thiruchitrambalam, kicking off my next directorial project starring uber-talented, and fan-favourite @ActorMadhavan. Produced by the acclaimed Mediaone Global Entertainment. Let's Roll! 🔥@Mediaone_M1 @sharmilamandre
— Mithran R Jawahar (@MithranRJawahar) February 11, 2023
காதல் மன்னனாக மட்டுமே ரசிகர்கள் பார்த்து பழகிய மாதவன் ஆக்ஷன் அவதார நாயகனாக ரசிகர்களுக்கு சமீபகாலமாக விருந்தளித்து வருகிறார். தற்போது, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்க இருப்பதால் இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மித்ரன் ஜவஹர் யாரடி நீ மோகினி படம் மூலமாக இயக்குனராக தமிழில் அறிமுகமானார். தனுஷை வைத்து இவர் குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கினார். பின்னர், மீண்டும் ஒரு காதல் கதை படத்தை இயக்கினார். மேலும், மதில் என்ற வெப்சீரிசையும் இயக்கியுள்ளார். திருச்சிற்றம்பலம் படம் இவருக்கு யாரடி நீ மோகினி போன்று மாபெரும் வெற்றியை அளித்ததால் இவரது அடுத்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாதவன் நடிப்பில் இறுதியாக ராக்கெட்ரி மற்றும் தோகா படங்கள் வெளியாகியிருந்தது. தற்போது அவர் நடிப்பில் இந்தியில் அம்ரிகி பண்டிட் படம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:100 days of Love Today : 100 நாட்களை எட்டியது லவ் டுடே... மொத்த வசூல் இத்தனை கோடியா? மீண்டும் ஸ்கெட்ச் போடும் கூட்டணி
மேலும் படிக்க: Valentines Day 2023: 90ஸ் கிட்ஸ் ரெடியா இருங்க.. பழைய காதல் படங்களை திரையிடும் தியேட்டர்கள்.. லிஸ்ட் இதோ..!