Thee Thalapathy Song : பற்றி எரியும் சோசியல் மீடியா;1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘தீ தளபதி’ பாடல்!
10 மில்லியன் பெற்ற தீ தளபதி பாடல் ரிலீஸாகி ஒருநாள் கூட முழுவதுமாக முடியாத நிலையில், பெறும் சாதனைகளை படைத்து வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.
மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தப்பாடல் யூடியூப்பில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் விஜயின் 30 வருட சினிமா வாழ்கையை கொண்டாடும் வகையில், கடந்த 4 ஆம் தேதி, அதாவது நேற்றைய தினம் 'தீ தளபதி' பாடல் வெளியாகும் என்றும் இந்த பாடலை பிரபல நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. அதன் படி நேற்று மாலை 4 ஆம் தேதி இப்பாடல் வெளியானது.
10 million+ real time views for #TheeThalapathy 💥🔥 pic.twitter.com/j85FnKH1nd
— Rajasekar (@sekartweets) December 5, 2022
ரசிகர்களிம் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடல் இன்று காலையில், 8 மில்லியன் பார்வையார்களை கடந்தது. தொடர்ந்து சமூக வலைதளத்தில் வரவேற்பை பெற்று வரும் இந்தப்பாடல், வெளியான 21 மணி நேரத்தில், 10 மில்லியன் பார்வையாளர்களை ( 1 கோடி பார்வையாளர்கள்) கடந்து சாதனை படைத்துள்ளது. ரிலீஸாகி ஒருநாள் கூட முழுவதுமாக முடியாத நிலையில், 1 மில்லியன் பார்வையாளர்களை எட்டிய இந்தப்பாடலை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram
இந்த பாடல், சிம்பு ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியது. தீ தளபதி ஒருபுறம் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல அமைந்தது தளபதி 67 படத்தின் பூஜை விழா. பொதுவாக விமர்சையுடன் நடத்தப்படும் பூஜை விழா, காதும் காதும் வைத்தது போல் ரகசியமாக நடந்தது.
சென்னையில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற தளபதி 67 திரைப்படத்தின் பூஜையில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர் #Thalapathy67 #Vijay #Thalapathy #LokeshKanagaraj @actorvijay @Dir_Lokesh #Thalapathy67Pooja pic.twitter.com/dxKWv4TxY0
— NavaneethaKrishnan (@navneetakrisnan) December 5, 2022
இந்த பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோக்களை காண, மக்கள் ஆர்வமாக காத்து வருகின்றனர். அதிகாரபூர்வமாக எந்தவொரு போட்டோக்களும் வெளியாக நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில பழைய போட்டோக்களை தளபதி 67 பூஜை க்ளிக்ஸ் என சிலர் பரவிவருகின்றனர்.