மேலும் அறிய
திரையுலகில் கல்யாண சீசன்.. அடுத்தடுத்து திருமணத்துக்கு தயாராக காத்திருக்கும் ஜோடிகள்...
Upcoming Celebrities Marriage : நடிகர் பிரேம்ஜி திருமணத்தை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பல நடிகர் நடிகைகளுக்கு அடுத்தடுத்து திருமணம் நடைபெற உள்ளது. அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

வரவிருக்கும் பிரபலங்களின் திருமணங்கள்
அடுத்தடுத்து தென்னிந்திய திரையுலகில் ஒரே திருமண கொண்டாட்டங்கள் தான் களைகட்ட உள்ளது. அந்த வகையில் திருமணத்திற்கு தயாராக காத்திருக்கும் நட்சத்திரங்கள் பற்றிய ஒரு பார்வை:
பிரேம்ஜி அமரன் :
நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறமையாளராக விளங்கும் பிரேம்ஜி அமரன் 45 வயதாகியும் இன்னும் பேச்சுலராகவே இருக்கிறாரே என கேள்விகளும், எப்போ கல்யாணம் என கேட்டு ஏராளமான விமர்சனங்களும் எழுந்த வண்ணமாக இருந்தன.
அந்த வகையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தன்னுடைய திருமண அழைப்பிதழை சோசியல் மீடியாவில் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்தார் நடிகர் பிரேம்ஜி.

வரும் ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜி திருமணம் நடைபெற உள்ளது. இதில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால் பிரைவசி கொடுத்து மணமக்களை வாழ்த்துமாறு ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார் பிரேம்ஜி அண்ணனும் இயக்குநருமான வெங்கட் பிரபு.

ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி :
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இடையே காதல் மலர்ந்து அவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் வரும் ஜூன் 10ம் தேதி அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணமும்
அதை தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்காக ஜூன் 14ம் தேதி லீலா பேலஸில் மிகவும் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரலட்சுமி சரத்குமார் :
நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்னர் மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவுடன் எளிமையான முறையில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
தற்போது வரலட்சுமி - நிகோலய் திருமணம் வரும் ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளது. பின்னர் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்படுகிறது.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி:
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல ஆண்டுகளாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஒரு கோயிலில் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை முடித்து கொண்டனர்.
அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் திரையுலகை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது என கூறப்படுகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement