Cinema Headlines Sep 9 : கோட் முதல் வார வசூல்... வேட்டையனின் கேரளா ஸ்டைல் 'மனசிலாயோ'... இன்றைய சினிமா செய்திகள்
Cinema Headlines: விஜயின் 'தி கோட்' படம் வெளியாகி நான்கே நாளில் வசூல் 150 கோடியை நெருங்கியுள்ளது. வேட்டையனின் முதல் சிங்கிள் பாடலான 'மனசிலாயோ...' பாடல் வெளியானது. இன்றைய சினிமா செய்திகள்.
![Cinema Headlines Sep 9 : கோட் முதல் வார வசூல்... வேட்டையனின் கேரளா ஸ்டைல் 'மனசிலாயோ'... இன்றைய சினிமா செய்திகள் The Goat First week collection crosses 150 crores rajinikanth vettaiyan movie first single manasilaayo song out today Cinema Headlines Sep 9 : கோட் முதல் வார வசூல்... வேட்டையனின் கேரளா ஸ்டைல் 'மனசிலாயோ'... இன்றைய சினிமா செய்திகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/09/25a8d2270c4f7305ff42cf6641eb0d6a1725887315586224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோட் பாக்ஸ் ஆபீஸ் வசூல் :
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் வெளியான திரைப்படம் 'தி கோட்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் 126 கோடி ரூபாய் வசூலித்தது. நான்கு நாட்களில் உள்நாட்டு வசூல் மட்டுமே 150 கோடியை நெருங்கியுள்ளது.
தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம் :
தமிழ் சினிமா துறையில் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உறுமீன்,மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ஓ மை கடவுளே, பேச்சுலர், மிரள், கள்வன், ராட்சசன்,பேச்சுலர் உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்தவர் இயக்குநர் டில்லி பாபு. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும், டில்லி பாபுவின் மரணத்திற்கு இரங்கலை தெரிவித்தனர்.
ஜெயம் ரவி - ஆரத்தி விவாகரத்து :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ஆடை வடிவமைப்பாளர் ஆர்த்தியை 2009ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என்ற இரு மகன்கள் உள்ளனர். மிகவும் சந்தோஷமாக இருந்த தம்பதியினர் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் விவாகரத்து பெற உள்ளனர் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. தற்போது தங்களுடைய பிரிவை சோசியல் மீடியா மூலம் உறுதி செய்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தங்கலானுக்கு குவியும் பாராட்டுக்கள் :
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான திரைப்படம் 'தங்கலான்'. பார்வதி, பசுபதி , மாளவிகா மோகனன், ஹரிகிருஷ்ணன், டேனியல் கால்டகிரோன், அர்ஜூன், ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். தமிழில் வெளியான தங்கலான் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததை தொடர்ந்து வட மாநிலங்களில் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகி இந்தி திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.
வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் :
'ஜெய் பீம்' புகழ் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'வேட்டையன்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'மனசிலாயோ' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை AI மூலம் பயன்படுத்தியுள்ளனர். கேரளா ஸ்டைலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)