Vikram : விஜய், அஜித் மாதிரி ரசிகர்கள் இல்லை...பத்திரிகையாளரை வச்சு செஞ்சுட்டாரு விக்ரம்
ஏன் உங்களுக்கு விஜய் அஜித் மாதிரி ரசிகர்கள் பட்டாளம் இல்லை என்று கேள்விகேட்ட பத்திரிகையாளரை நடிகர் விக்ரம் திக்குமுக்காட வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

தங்கலான்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15 தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் விக்ரம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இப்படியான நிலையில் சென்னையில் நடந்த சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு நடிகர் விக்ரம் பதிலளித்த விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அஜித் விஜய் மாதிரி எனக்கு ரசிகர்கள் இல்லையா?
Q: You are giving the best in everytime, but you don't have fans like Ajith, Suriya etc?
— AmuthaBharathi (@CinemaWithAB) August 11, 2024
Chiyaan: I know to do commercial films like Saamy & Dhool. But I want to bring cinema to next level like #Thangalaan❤️🔥
And Final question from Chiyaan😂💥pic.twitter.com/CsnPBnNCrV
பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகிறீர்கள் ஆனால் அஜித் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மாதிரி உங்களுக்கே ஏன் ரசிகர்கள் பட்டாளம் இல்லை என்று கேள்விகேட்டார் . இதற்கு பதிலளித்த விக்ரம் “என்னுடைய ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் திரையரங்கத்திற்கு வந்து பாருங்கள் . உங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நம்பர் 1 நம்பர் 2 என்பதில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. ரசிகர்கள் என்று ஒரு தரப்பு இருக்கிறார்கள். ஜெனரல் ஆடியன்ஸ் என்று ஒரு தரப்பு இருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை பொதுவாக சினிமா ரசிகர்கள் எல்லாரும் என் ரசிகர்கள் தான் . நானும் தில் , தூள் , சாமி போன்ற படங்களில் எல்லாம் நடித்து வந்தவன்தான் . எனக்கு தெரியாதது எதுவும் கிடையாது. வழக்கமான பாதையில் போகாமல் சினிமாவை எப்படி கொண்டு போகலாம் என்கிற முயற்சியில் நான் இறங்கினேன்.
அந்த மாதிரியான ஒரு முயற்சிதான் தங்கலான். அந்த மாதிரியான ஒரு முயற்சி தான் வீர தீர சூரன். என்னுடைய எந்த படத்தை வேண்டுமானாலும் எடுத்து பாருங்கள் அதில் நீங்கள் குறை சொல்லலாம் ஆனால் அந்த படங்கள் எல்லாம் முன்னுதாரணமானவை.
ராவணன் ஒரு ஐகானிக் படம். எங்க வீட்டில் இன்று வரை ராவணன் தான் நான் நடித்த சிறந்த படம். கிங் வெளியானபோது அது அன்றைய சூழலுக்கு ரொம்ப அட்வான்ஸான படம். நீங்க யார் ரசிகர்? இங்கே வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கச் சொல்லி யார் பேசி வைத்து வந்திருக்கிறீர்களா?” என்று அடுத்தடுத்து பங்கமாக பத்திரிகையாளரை விக்ரம் கலாய்த்த விதத்தில் அந்த பத்திரிகையாளர் தடுமாறிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது





















