Thalapathy 66: விஜயை இயக்கவுள்ள தெலுங்கு இயக்குநர்..? ஒரு ட்வீட் பதிவிட்டு டெலீட் செய்த பிரபலம்..!
விஜயின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இந்த முறை விஜயை இயக்கப்போவது தெலுங்கு இயக்குநர் எனக் கூறப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளர். வெள்ளை நிற உடை அணிந்து விஜய் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் விதமாக வெளியான பீஸ்டின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. தளபதி 65 படத்தில் தளபதி விஜய் ஒரு புதிய அவதாரத்தில் காணப்படுவார் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர் . மேலும் இந்த படம் அதிரடி, காதல் மற்றும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார் , மேலும் இந்த அழகான நடிகை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். யோகி பாபு, அபர்ணா தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்டப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜயின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இந்த முறை விஜயை இயக்கப்போவது தெலுங்கு இயக்குநர் எனக் கூறப்படுகிறது. தெலங்கு இயக்குநர் வம்சி தான் தளபதி 66ன் இயக்குநர் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் அங்கங்கே வெளியானாலும் நேற்று பாடகர் க்ரிஷ் செய்த சம்பவத்தால் இந்த தகவல் வைரலாகியுள்ளது.
நேற்று இயக்குநர் வம்சியின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். வம்சியின் நண்பரான க்ரிஷும், புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இயக்குநரும், நல்ல மனிதருமான இயக்குநர் வம்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த வருடம் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள். நடிகர் விஜய் உடனான படத்திற்கு வாழ்த்துகள். காத்திருக்கிறோம் என பதிவிட்டார். இந்த ட்வீட்டை போட்டதுமே வைரலானது. தளபதி 66 அப்டேட் என விஜய் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் ட்வீட் பதிவிட்ட உடனேயே அந்த பதிவை டெலிட் செய்தார் க்ரிஷ். ஆனாலும் அவர் பதிவிட்ட ட்வீட்டின் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் தளபதி 66 படத்தை இயக்கப்போவது வம்சி தான் என்றும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது.
Thank You. https://t.co/LoAQCawoFa
— Vamshi Paidipally (@directorvamshi) July 27, 2021
தனியார் தொலைக்காட்சி ஒன்று இயக்குநர் வம்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து #Thalapathy66 என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டு இருந்தனர். அந்த பதிவுக்கும் வம்சி நன்றி என பதிலளித்துள்ளார். இதன் மூலம்விஜயை இயக்கவுள்ளது வம்சிதான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Dhanush Birthday: ஒல்லி to கில்லி : விமர்சனங்களை தகர்த்த தனுஷ்.. ஹேப்பி பர்த்டே அசுரா..!