Whistle Podu: விசில் போடு பாடலுக்கு இப்படி ஒரு அர்த்தமா? - விளக்கம் கொடுத்த மதன் கார்க்கி!
விசில் போடு பாடல் விஜய்யின் அரசியல் வருகையை பற்றி எழுதியதாக கூட எடுத்துக் கொள்ளலாம். நான் பாடலை எழுதும்போது அவர் அரசியல் வருகை பற்றி தெரிவிக்கவில்லை.
விசில் போடு பாடல் விஜய்யின் அரசியல் வருகையை பற்றி எழுதியதாக கூட எடுத்துக் கொள்ளலாம். நான் பாடலை எழுதும்போது அவர் அரசியல் வருகை பற்றி தெரிவிக்கவில்லை. வெங்கட் பிரபு மட்டும் இந்த படத்துக்கு பிறகு விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடலாம் என தெரிவித்தார். அதனைக் கருத்தில் கொண்டும் வரிகள் எழுதப்பட்டது.
பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என்றால் அரசியல், பார்ட்டி என எதை வேண்டுமானாலும் குறிக்கும். அப்படித்தான் இந்த பாடல் எழுதப்பட்டது. விஜய் இந்த பாடலை கேட்டு விட்டு “நன்றி” என சொன்னார். பூஜைக்கு ஒருநாள் முன்னாடி இந்த பாடலை எடுத்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்த பாடலை ரொம்ப என்ஜாய் செய்தார்கள். முதலில் அந்த பாடலில் மைக்கேல் ஜான்சன்ன்னா மூன் வாக்.. ஜானி வால்கருக்கு செல்வாக்கு என ஒரு வரி எழுதப்பட்டது. பின்னர் அந்த வரியை நீக்கி விட்டு மார்லன் பிராண்டோ நான் டான் வாக் என மாற்றினேன்.
வாக், வாக் என வரிகள் முடியும் நிலையில் மாற்றம் வரணும்ன்னா கோ வாக் என்ற வரி வரும். அதனை மாற்றம் வேண்டும் எனவும் எடுத்துக் கொள்ளலாம்.இன்னொரு வரியில் கோ வாக் என சேரும் போது கோவாக் என வரும். கோ என்றால் அரசன் என பொருள் மாற்றம் வேண்டும் என்றால் அரசனாக்கு எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
சில பாடல்கள் எல்லாம் வெளியான உடனே எல்லாரிடத்திலும் கொண்டாடப்படும். ஆனால் மெலோடியாக போடப்படும் பாடல்கள் மெதுவாக தான் ரீச் ஆகும். அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். வெங்கட் பிரபுவுடன் நான் பிரியாணி படத்தில் இருந்து தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறேன். இந்த படத்தில் நான் ஒரு பாடல் மட்டும் தான் எழுதியிருக்கிறேன்” என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.