மேலும் அறிய

Thalapathy Vijay: ரெடியா இருங்க! விரைவில் நேரடி அரசியலில் விஜய் - மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசியது என்ன?

மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் தான் விரைவில் அரசியலுக்கு வர உள்ளது குறித்து விஜய் சூசகமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் நடிகர் விஜய்,  நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்பொழுது விஜய் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த திடீர் ஆலோசனை தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அவசர, அவசரமாக ஆலோசனை கூட்டம்:

முன்னதாக நடைபெற்ற அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் முன் அறிவிப்புடன் நடைபெற்ற நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அவசர அவசரமாக நடைபெறுவதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சில மாவட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாவும், சென்னை கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆணையிடுங்கள் செய்வேன்:

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விஜய், அரசியலுக்கு வருவது குறித்து சூசகத் தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  விஜய் பேசியதாக கூறப்படுவதாவது” ரசிகர்கள், நிர்வாகிகள் ஆன நீங்கள் தான் மன்னர்கள், மக்கள் மற்றும் ரசிகர்கள் நினைப்பதை தளபதி நிறைவேற்ற வேண்டும். நீங்கள் ஆணையிடுவதை நான் செய்வேன்” என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கூறியது போல் பூத் வாரியாக அமைப்பை வலுப்படுத்த அறிவுறுத்தல் கொடுத்துள்ளார், என்ற தகவலும் வெளியாகி உள்ளது.  10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தது. தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வங்கியது என சமீப காலமாக விஜய் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 

அரசியல் காய் நகர்த்தும் தளபதி:

இவை அனைத்துமே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினரும், விஜயின் பிறந்தநாளில், உணவு வழங்குதல், அரசு பேருந்தில் இலவச டிக்கெட் வழங்குதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். மேலும் சென்னை வெள்ளத்தின் போது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.  இப்படி விஜயின் அடுத்தடுத்த நகர்வுகள் அவர் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் விஜய் இன்று நடத்திய திடீர் ஆலோசனைக்கூட்டம், வரும் மக்களவை தேர்தலில் நிர்வாகிகளை களம் இறக்குவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  தகவல்களும், யூகங்களும் ஒருபுறம் இருக்க, விஜய் அரசியலுக்கு வருவாரா? அல்லது கடைசிவரை போக்கு காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க 

Singapore Saloon: தியேட்டரை அலறவிடும் காமெடி.. ஆர்.ஜே.பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்” படத்தின் விமர்சனம் இதோ..!

Blue Star Twitter Review: கிரிக்கெட்டில் சாதி அரசியல்: ப்ளூ ஸ்டார் பட விமர்சனம்: ட்விட்டர்வாசிகள் சொல்வது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
"நீதான்டா நல்ல ஃப்ரண்ட்” .. நண்பனை ஆட்டோவுடன் சேர்த்து கொளுத்திய 3 பேர்!
Embed widget