Blue Star Twitter Review: கிரிக்கெட்டில் சாதி அரசியல்: ப்ளூ ஸ்டார் பட விமர்சனம்: ட்விட்டர்வாசிகள் சொல்வது என்ன?
Blue Star Movie Twitter Review: ப்ளூ ஸ்டார் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியனின் நடிப்பு எப்படி என்பதைப் பார்க்கலாம்!
எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷாந்தனு, நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ப்ளூஸ்டார். கிரிக்கெட்டை உலகமாகக் கருதும் அசோக் செல்வன், ஷாந்தனு, இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி, அரக்கோணம் பகுதியில் 90களில் நடைபெற்ற கதை, கிரிக்கெட்டில் நடைபெறும் சாதிய அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்களும் பட வெளியீட்டுக்கு முன்னதாகவே வரவேற்பைப் பெற்றுள்ளன. பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளன.
அசோக் செல்வனின் முந்தைய படமான போர் தொழில் சென்ற ஆண்டின் சிறப்பான வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்த நிலையில், இந்த ஆண்டும் அதே போல் ஒரு கிராண்ட் ஓப்பனிங் அவருக்கு அமையுமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில், ப்ளூ ஸ்டார் திரைப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள், அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியனின் நடிப்பு எப்படி? என்பதை ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள். அவர்களது விமர்சனங்களைப் பார்க்கலாம்!
Madras + sarpetta = #BlueStar don’t miss it this deserve all success pic.twitter.com/8Hc080wgWf
— anand (@anandthethinker) January 25, 2024
“மெட்ராஸ், சார்பட்டா கலந்த படம். இந்தப் படம் அத்தனை வெற்றிக்கும் தகுதியானது” எனத் தெரிவித்துள்ளார்.
#BlueStar First Half - Quite appealing. Kudos to Editor & DOP. So far, they prove to be showstoppers. It is evident that the second half will be more riveting as the interval point unravels the forthcoming challenge of protagonists. pic.twitter.com/0oHbtnDtbm
— Richard Mahesh (@mahesh_richard) January 25, 2024
“ப்ளூ ஸ்டார் முதல் பாதி ரசிக்கும்படியாக இருந்தது. எடிட்டர், ஒளிப்பதிவாளர் இருவரும் தான் சூப்பர். இடைவேளை, கதாநாயகர்களுக்கு இடையே வரவிருக்கும் சவால் பற்றிய முடிச்சை அவிழ்த்து விடுவதால், இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது தெளிவாகிறது” எனக் கூறியுள்ளார்.
#BlueStar
— AK🐦❤️🔪 (@Ashok588500) January 25, 2024
A bit formulaic yet solid sports drama👌
2nd half konjam lengthy & predicatable. adha thavara entha prachanaiyum illa moviela.
Good performances from everyone👏
Ashok's mom character👌🤣🤣
Loved Ashok selvan-keerthi romance portion👌❤
Overall, GOOD👌⭐7.75/10 pic.twitter.com/z8LmhCebwy
“தரமான ஸ்போர்ட்ஸ் டிராமா, இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை மற்றும் யூகிக்க முடிந்தது. அத தவிர எதுவும் பிரச்சினை இல்ல. எல்லாரோட பர்ஃபாமன்ஸூம் சூப்பர்” எனத் தெரிவித்துள்ளார்.
#Bluestar interval - cricket politics presented in the most authentic way possible .
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 25, 2024
So many layers of oppression explained in the most easiest way possible !
Waiting for the second half !
“கிரிக்கெட்டும் அரசியலும் ரொம்பவே நம்பும்படியான வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒடுக்குமுறையின் பல அடுக்குகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.