Thalaivar 170: ஜோராக நடந்த “தலைவர் 170” பட பூஜை.. சூப்பரான லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..வைரல் போட்டோ..!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்களை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170வது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்களை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தலைவர் 170
ஜெய் பீம் படம் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக டி.ஜே.ஞானவேல் மாறிவிட்டார். அவரின் 2வது படம் ரஜினியுடன் அமையப் போகிறது என்ற தகவல் பரவிய போதே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. தொடர்ந்து லைகா நிறுவனம் ரஜினிகாந்த் - டி.ஜே.ஞானவேல் படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டபோது திரையுலகில் மிகப்பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. இந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடத்தில் எழுந்து விட்டது.
#Thalaivar170 🕴🏻 journey begins with an auspicious pooja ceremony 🪔🌸 today at Trivandrum 📍@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4 @ritika_offl @officialdushara @srkathiir @GMSundar_ @RakshanVJ @KKadhirr_artdir @philoedit… pic.twitter.com/t5LHE6sgoA
— Lyca Productions (@LycaProductions) October 4, 2023
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் இணைந்த பிரபலங்கள் தொடர்பான அப்டேட் கடந்த 3 தினங்களாக வெளியாகி வந்தது. இதனிடையே நேற்றைய தினம் (அக்டோபர் 2) கொச்சி சென்றார் ரஜினிகாந்த். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தலைவர் 170” படம் சமூக கருத்துள்ள சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தலைவர் 170 படத்துக்கான ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதன் புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் தலைவர் 170 படத்தின் லுக்கில் ரஜினிகாந்தும் அவருடன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மஞ்சு வாரியர் மற்றும் விஜய் டிவி புகழ் ரக்ஷன் மற்றும் படத்தின் இயக்குநர் ஞானவேல் மேல் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
லால் சலாம்
ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்லார் நடிகர் ரஜினிகாந்த். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் விஷ்னு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது லான் சலாம் திரைப்படம் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.
தலைவர் 171
தலைவர் 170 படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.