Ajith Latest Photo: அபாய பாறையில் அகாய சூரனாய் அஜித்... தலை சுற்ற வைக்கும் இடத்தில் ‛தல’ !
கடலோரத்தில் மலையின் மீதுள்ள பாறையின் ஓரத்தில் அஜித் நின்றுக்கொண்டிருக்கிறார். இது எந்த இடம் என்று சரியாக தெரியவில்லை.
வாகா எல்லையில் வீரர்களுடன், பாலைவனத்தில் ஓய்வு புகைப்படங்களை தொடர்ந்து தற்போது பாறை ஒன்றின் மீது அஜித் ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் நடிப்பதை தன் தொழிலாக கருதும் அஜித், ஓய்வு நேரங்களில் குடும்பத்துடனும், தனக்கு பிடித்ததையும் செய்து வருகிறார். புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்ட அஜித், தன்னுடன் நடித்த சக கலைஞர்களை விதவிதமாக புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்தார். ஏரோனாடிக்ஸில் ஆர்வம் கொண்ட அஜித், அந்தப் பாடம் தொடர்பான மாணவர்களுடன் சேர்ந்து ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அத்துடன் மாணவர்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார். இவரின் முயற்சியில் உருவான ட்ரோன்கள் கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிப்பதற்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது. இப்படி பல வேலைகளில் ஆர்வம் இருக்கும் அஜித், தற்போது பைக்கில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த ‘வலிமை’ படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அஜித் தற்போது பிடித்தமான பைக்கில் நாட்டின் பல இடங்களுக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்.
Nothing can stop him from living his passion and making his each dream come true. Universally Loved. #AjithKumar pic.twitter.com/vcynxZdkZ8
— Boney Kapoor (@BoneyKapoor) October 23, 2021
சமீபத்தில், இந்திய - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கையில் தேசியக் கொடியுடன் அஜித் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. பைக் ரைட் செய்த அஜித் வாகா எல்லைக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அங்குள்ள ராணுவ வீரருடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போட்டோவும் வைரலானது. மேலும், சில புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.இதன்பின்பு, பாலைவனத்தி அஜித் பைக்கின் கீழ் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்வது போன்ற புகைப்படம் வெளியானது.
#ThalaAjith 💜 pic.twitter.com/TiIZtsZ6ff
— Vignesh Theni (@Vignesh_twitz) October 27, 2021
இந்த நிலையில், பாறை ஒன்றின் மீது அஜித் ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. கடற்கரை ஓரத்தில் மலையின் மீதுள்ள பாறையின் ஓரத்தில் அஜித் நின்றுக்கொண்டிருக்கிறார். இது எந்த இடம் என்று சரியாக தெரியவில்லை. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்