மேலும் அறிய

37 ஆண்டுகளை கடக்கும் ‛தாய்க்குலமே தாய்க்குலமே’... பாண்டியராஜனின் ‛இரட்டை’ ராசி!

Thaikulame Thaikulame movie: 1995ம் ஆண்டு என். முருகேஷ் இயக்கத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, வினயா பிரசாத் நடிப்பில் வெளியான திரைப்படம் "தாய்க்குலமே தாய்க்குலமே". இப்படம் வெளியாகி இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டன.

முட்டைக் கண்களை உருட்டி பிரபலமான நடிகர் பாண்டியராஜன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் பிறகு உதவி இயக்குனரானார்.  இவர் வயலின் இசையில் பட்டம் பெற்றவர். கே. பாக்யராஜிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்து பின்னர் 1985ம் ஆண்டு "கன்னி ராசி" எனும் படத்தை இயக்கியவர். அதற்கு பிறகு அவர் இயக்கிய ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தார் பிறகு நகைச்சுவையில் கலக்கி வந்தவர் பாண்டியராஜன். 

குடும்ப படம்: 

1995ம் ஆண்டு என். முருகேஷ் இயக்கத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, வினயா பிரசாத், வடிவேலு, ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "தாய்க்குலமே தாய்க்குலமே". இப்படத்திற்கான கதையை எழுதியவர் இயக்குனர் கே. பாக்யராஜ். பாண்டியராஜன் திரை பயணத்தில் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் தேனிசை தென்றல் தேவா. இப்படம் வெளியாகி இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டன.

37 ஆண்டுகளை கடக்கும் ‛தாய்க்குலமே தாய்க்குலமே’... பாண்டியராஜனின் ‛இரட்டை’ ராசி!

தெலுங்கிலும் கன்னடத்திலும் ரீ மேக்  :

"தாய்குலமே தாய்குலமே" படம் தமிழில் வெற்றி பெற்றதால் பின்னர் இப்படம் தெலுங்கில் கர்வாலி பஹர்வாலியாகவும் என்ற பெயரிலும், கன்னடத்தில் நானு நன்ன ஹெண்ட்தியரு என்ற பெயரிலும் ரீ மேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு  பொண்டாட்டி ராசி பாண்டியராஜன்:

பாண்டியராஜன் - ஊர்வசி ஜோடி ஒரு கலக்கலான கலகலப்பான ஜோடி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகளை கடந்த பின்னும் குழந்தை பிறக்காததால் மருத்துவரை அணுகுகிறார்கள். ஊர்வசியால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது  என்பதை தெரிந்து கொண்ட பாண்டியராஜன் தன் மீது பழியை ஏற்றுக்கொள்கிறார். சூற்றுலா பயணத்திற்காக நேபாளம் செல்லும் போது வினயாவை எதிர்பாராத விதமாக திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவனை ஊர்வசியும் பாண்டியராஜனும்  தத்தெடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை அருகில் இருக்க ஆசைப்பட்டு வினயா, பாண்டியராஜன் வீட்டில் சமையல்காரியாக வருகிறார். பிறகு உண்மையை அறியும் பாண்டியராஜனின் அப்பா சுந்தர்ராஜன் ஊர்வசியிடம் உண்மையை சொல்ல முற்படும் போது அதை தடுக்கிறார் பாண்டியராஜன். ஊர்வசி வினயாவிற்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகள் எடுக்கும் போது கதை உச்சகட்டத்தை அடைந்து சமரசம் ஏற்படுகிறது. பாண்டியராஜன் இரு மனைவி மகனோடு இன்பமாக வாழ்க்கையை நடத்துவதோடு கதை முடிக்கப்படுகிறது.

வெற்றிப்படம் :
 
நடிகர் பாண்டியராஜன் நடித்த பெரும்பாலான படங்கள் குடும்ப படங்களாகவே இருக்கும். அதில் ஏதாவது குளறுபடியும் இருக்கும். அந்த குளறுபடியால் இருந்து எப்படி கதை நகர்ந்து முடிவுக்கு வருகிறது என்பதை நகைச்சுவை கலந்து படமாக்கப்படும். இப்படம் ஒரு வெற்றிப்படமாக பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget