மேலும் அறிய

டென்னிஸ் பெண்களுக்கான விளையாட்டு இல்லையா? சமந்தா நடித்த விளம்பரத்தை பாராட்டிய சானியா மிர்ஸா

சமந்தா நடித்து வெளியாகியுள்ள பெப்சி விளம்பரத்தைப் பார்த்து தனது இளமைக் கால சவால்களை நினைவுகூறியுள்ளார் டென்னிஸ் வீரர் சானிய மிர்ஸா

சமந்தா நடித்துள்ள பெப்ஸி விளம்பரத்தைனைப் பார்த்து தனது இளமைக்காலத்தினை நினைவுகூர்ந்துள்ளார் டென்னிஸ் விரரான சானியா மிர்ஸா

அண்மையில் சமந்தா நடித்திருக்கும் பெப்ஸி விளம்பரம் ஒன்று வெளிவந்தது.,பெண்களின் திருமணத்திலிருந்து  அவர்கள் அணியும் உடை வரை சமூகத்தில் அவர்களைப் பற்றிய முன்முடிவுகளை இந்த விளம்பரத்தில் விமர்சித்துள்ளார் சமந்தா. இந்த விளம்பரத்தைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சானியா மிர்ஸா தான் தனது இளமைக் காலத்தில் சந்தித்த பல்வேறு கேள்விகளை தனக்கு நியாபகப்படுத்துவதாக கூறியுள்ளார்.

ஒரு டென்னிஸ் வீரராக வேண்டும் என்று தான் முடிவு செய்தபோது தன்னைச் சுற்றி எழுந்த பல்வேறு கேள்விகளை நினைவுகூறுகிறார் சானியா மிர்ஸா.’டென்னிஸ் பெண்களுக்கான விளையாட்டு அல்ல. ஒரு பெண் டென்னிஸில் என்ன சாதித்து விட முடியும்’ என பலவிதமான கேள்விகள் தன்னிடம் கேட்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

”ஆனால் இந்த கேள்விகளால் நான் எனது கனவை, தான் நிறுத்திக்கொள்ளவில்லை, நான் என்மேல் நம்பிக்கை வைத்தேன் அதைப் பற்றி சமூகம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. வெற்றியடைவதற்காக நான் இதுபோல் பல அசட்டுத்தனமான கேள்விகளைக் கடந்து வர வேண்டி இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் பெப்ஸி வெளியிட்டிருக்கும் இந்த விளம்பரம் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு மிகவும் ஊக்கமளிக்ககூடியதாக இருக்கிறதென்று பாராட்டியுள்ளார் சானியா மிர்ஸா.

சமந்தா அண்மைக் காலங்களில் திரைப்பட துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார். மையோசிடிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்படிருக்கும்  சமந்தா அதற்காக கடும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார். ஹைபர்பாரிக் என்னும் சிகிச்சை  முறையை மேற்கொண்டு வரும் சமந்தா அதை பற்றிய தகவல்களை தனது சமூக வலைதளத்திலும் பகிர்ந்து வருகிறார். இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சிட்டிபாபு சமந்தாவை பற்றி பேசிய சர்ச்சயான கருத்துகள் மறுபக்கம். ”சமந்தா திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும், சமந்தாவிற்கு வயதாகிவிட்டது. தனது திரைப்படங்களின் விளம்பரத்திற்காக தனது தனிப்பட்ட வாழ்க்கை மூலம் ஆதாயம் தேடுபவர் தான் சமந்தா” என்று அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பியிருந்தார் சிட்டிபாபு.

இத்தகைய சூழலில் சம்ந்தா தற்போது நடித்திருக்கும் பெப்ஸி விளம்பரம் மற்றவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. பெண்களை பற்றிய சமூகத்தின் முன்முடிவுகளை கடந்து அவர்கள் தங்களது லட்சியங்களை அடைவதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக இந்த விளம்பரம் அனைவராலும்  பாராட்டப்படுகிறது.

சமந்தா நடித்திருக்கும் குழ்ஹி திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் பாடல் ஒன்றை வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget