Seetha Raman: ராம் கேட்ட கேள்வியால் பொங்கி எழுந்த சீதா.. சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ...!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் தூக்கத்திலிருந்து எழுந்த ராம் அப்பாவும் சித்தப்பாவும் ஜெயிலில் இருப்பதை நினைத்து சீதாவிடம் வருத்தப்பட வெளியில் இருந்து இதைக்கேட்ட மகா இருவரும் கொஞ்சிக் கொண்டிருப்பதாக தவறாக நினைத்து மூன்று பெண்களுடன் ரூமுக்குள் நுழைந்து அப்பாவும் சித்தப்பாவும் ஜெயிலில் இருக்கும்போது இப்படி கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க உங்களுக்கு கேவலமா இல்லையா என்று கேள்வி கேட்கிறாள்.
இதனால் ராம் அதிர்ச்சி அடைய சீதா அவர் அப்பாவையும் சித்தப்பாவையும் பற்றி சொல்லித்தான் அழுதுகிட்டு இருந்தாரு, கொஞ்சிக்கிட்டு ஒன்னும் இல்லை என்று சொல்ல மகாவும் மூன்று தங்கைகளும் உங்கள் முகத்தைப் பார்த்தாலே தெரியுது என அவமானப்படுத்தி பேச சீதா எது அநாகரிகம்? புருசன், பொண்டாட்டி இருக்கிற ரூமோட கதவை தட்டாமல் இப்படி உள்ள வந்து இருக்கீங்களே இதுதான் அநாகரிகம் என பதிலடி கொடுக்கிறாள்.
அதோட ராம் அம்மா மட்டும் இருந்திருந்தால் இப்படி அப்பாவையும் சித்தப்பாவையும் ஜெயிலுக்கு போக விட்டிருப்பாங்களா என்று கேள்வி கேட்க மகா அதிர்ச்சி அடைகிறாள். மகா திரும்பவும் எதையும் பேச வர ராம் மீண்டும் உங்க அக்கா இருந்தா இப்படி நடந்து இருக்குமா என கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறான்.
இதனைத் தொடர்ந்து சீதா ராமிடம் இனிமேல் இந்த குடும்பத்தை நீங்கதான் வழி நடத்தணும். நல்லது கெட்டது எடுத்து சொல்லணும் என மஹாவின் இடத்தை பறித்து ராமிடம் கொடுக்க முயற்சி செய்கிறாள். இதனால் மகா கடும் கோபத்தோடு வெளியே வர எல்லாம் சீதா தான் என ராமின் தங்கைகள் எல்லோரும் மகாவை ஏற்றி விடுகின்றனர்.
உடனே மகா இது நானும் சீதாவும் ஆரம்பித்த போர், நானே இதை முடிவுக்கு கொண்டு வரேன் என சவால் விடுகிறாள். மறுநாள் மகா வாக்கிங் செல்ல அர்ச்சனாவை கூப்பிட அவள் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா என கேள்வி கேட்கிறாள். வீட்ல இருந்தா எதுவும் செய்ய முடியாது என்று மகா அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்ப சீதா மீராவுடன் எதிரே வந்து நிற்கிறாள்.
வெளியே போகும்போது முக்காடு போட்டுட்டு போங்க நம்ம செக்யூரிட்டி எல்லார்கிட்டயும் மாமாவும் சின்ன மாமாவும் கஞ்சா கேஸ்ல தான் ஜெயிலுக்கு போய் இருக்கிறதா சொல்லி வெச்சி இருக்காரு, அதனால அவமானமா போயிடும் என நக்கல் அடிக்க மகா அதெல்லாம் போட முடியாது என்று வெளியே கிளம்ப அப்போது செக்யூரிட்டி யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்க மகா அவனிடம் சென்று என்ன பேசிக்கிட்டு இருக்க? அவர் கஞ்சா கேஸ்ல தான் உள்ள போயிட்டாருனு சொல்லிக்கிட்டு இருக்கியா என்ன கோபப்படுகிறாள்.
உடனே செக்யூரிட்டி ஐயா கஞ்சா கேஸ்லயா உள்ள போயிருக்காரு என்று கேள்வி கேட்டு மகாவுக்கு ஷாக் கொடுக்க செக்யூரிட்டிக்கு இதுவரை எதுவும் தெரியாது என தெரிய வருகிறது. அதன் பிறகு மகா வெளியே கிளம்ப சீதா முக்காடு போடும்படி சைகையில் நக்கல் அடிக்கிறாள்.