Ninaithen Vanthai: எழிலுடன் லிஃப்ட்டில் சிக்கிய சுடர்.! கடுப்பான மனோகரி - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்
நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினேத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழிலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஒரு பெண் பிரசவ வலியில் துடிக்க அவளுடைய கணவன் வராமல் இருக்க நீ வந்தா தான் ஆபரேஷன் நடக்கும் என சொல்லி விட அவன் வந்த பிறகு நீ எல்லாம் எதுக்கு கல்யாணம் பண்ண என திட்டுகிறான். இதையடுத்து தமிழ் சாப்பாடு கொண்டு வர எழில் நீ எதுக்கு வந்த என்று கேட்க ராமையா இல்லாததால் சாப்பாடு கொண்டு வந்ததாக சொல்கிறாள். ஆனால் எழில் நீ இங்க எல்லாம் வர கூடாது என திட்டி லிப்டுக்குள் செல்ல சுடரும் உள்ளே வந்து விடுகிறாள்.
திடீரென ஆஃப் ஆன லிஃப்ட்:
திடீரென்று லிஃப்ட் ஆஃப் ஆக எழில் மனோகரிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் கூட தமிழ் இருப்பதை தெரிந்து பயங்கர கடுப்பாகிறாள். வேகவேகமாக லிப்டை ரெடி பண்ண லிஃப்ட் ஆன் ஆனதும் கேட்ட சத்தத்திற்கு பயந்து தமிழ் எழிலை கட்டி பிடிக்க கதவு திறக்க இதை பார்த்து மனோகரி மேலும் அதிர்ச்சி அடைகிறாள்.
பதிலடி கொடுத்த சுடர்:
தமிழை பிடித்து நீ வேணும்னு தான் இதையெல்லாம் பண்ணியிருக்க என்று திட்ட சுடர் எனக்கு என்ன ஆசையா? என பதிலடி கொடுத்து அங்கிருந்து நகர்கிறாள். இரவு இடி மின்னலுடன் மழை பெய்ய அஞ்சலி பயத்தில் தூங்காமல் வெளியே வர இங்கே ரூமில் இந்துமதியை பார்த்து தூக்கம் வராமல் இருக்கும் சுடரும் எழுந்து வர அஞ்சலியை பார்த்து பயப்படாத என்கூட வந்து படுத்துக்க என்று கூட்டிச்சென்று இந்துமதியை போல அஞ்சலியை தூங்க வைக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
View this post on Instagram