Karthigai Deepam: கார்த்திக், தீபாவை ஒன்றுசேர்க்க மைதிலி போட்ட பிளான்... கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்...!
Karthigai Deepam: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியிடம் ஊரில் காப்பு கட்டி இருப்பதால் வர முடியாது என்று சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தீபா அபிராமி சொன்ன வார்த்தையால் தனது மனதுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்க மைதிலி கார்த்திக்கு பால் கொண்டு போய் கொடுக்க அவன் தீபா குடுக்க சொன்னாங்களா என்று கேட்கிறான், மைதிலியும் ஆமாம் என்று சொல்ல அதை தீபாவே கொடுத்து இருக்கலாமே என்று கேட்கிறான்.
இதனையடுத்து ஊரில் திருவிழா நடக்க உள்ள நிலையில் வள்ளி திருமணம் தெருக்கூத்து நடைபெற இருப்பதாக அறிவிப்பு வர மைதிலி நாம எல்லாரும் தெருக்கூத்துக்கு போகலாம், அப்போ தான் கார்த்திக்கும் தீபாவுக்கும் தனியாக இருக்க நேரம் கிடைக்கும் என்று சொல்ல எல்லாரும் சரி என்று சொல்லி கிளம்பி செல்கின்றனர்.
கார்த்திக் வீட்டிற்கு வெளியில் கொசுக்கடியில் படுத்து கொண்டிருக்க வீட்டிற்குள் இருக்கும் தீபா கார்த்திக் தூங்கி விட்டதாக நினைத்து கொசு வத்தியை கொளுத்தி வைத்து விட்டு வர தூங்குவது போல நடிக்கும் கார்த்திக் மனதுக்குள் இவ்வளவு காதலை வச்சிட்டு ஏன் பிடிக்கலைனு சொன்னாங்க என்று யோசிக்கிறான். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த மைதிலி இருவரையும் சேர்த்து வைக்க பேய் வேடம் போட்டு வந்து தீபாவை பயமுறுத்தி கழுத்தை நெறிக்க அவள் கார்த்திக் சார் கார்த்திக் சார் என்று சத்தம் போடுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க: India World Cup Squad: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட பட்டியல்