Karthigai Deepam: தீபாவுக்கு அபிராமி போட்ட கண்டிஷன்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்...!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல போன நிலையில் அங்கு அபிராமியும் ஐஸ்வர்யாவும் வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.தீபா கார்த்தியை வெளியே அழைத்து வாழ்த்து சொல்ல அபிராமியும் ஐஸ்வர்யாவும் அங்கு வர தீபா வாழ்த்து சொல்லாமல் நிற்கிறாள், அடுத்ததாக அபிராமி கார்த்தியிடம் நாளைக்கு உனக்கு பிறந்த நாள் பார்ட்டி இருக்கு நிறைய வேலை இருக்கும், போய் தூங்கு என்று அனுப்பி வைக்கிறாள்.
அதன் பிறகு தீபாவிடம் நீ நாளைக்கு முழுக்க கார்த்தியை நெருங்கவே கூடாது, ஏதாவது பிரச்சனை என்கிட்டே வந்தது அவ்வளவு தான் என்று எச்சரிக்க தீபா வருத்தம் அடைகிறாள், அதன் பிறகு ஐஸ்வர்யா நட்சத்திராவுக்கு போன் செய்து நாளைக்கு கார்த்தி பிறந்தநாள் பார்ட்டி இருக்கு, நீ வந்துடு என்று சொல்கிறாள்.மறுநாள் ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து அபிராமியிடம் கார்த்திக் சாருக்கு வாழ்த்து சொல்லிட்டு போயிடுறேன் என்று சொல்ல அவள் பார்ட்டி முடியற வரைக்கும் நீ இங்க தான் இருக்கணும் என்று சொல்லி அவளை கார்த்திக்கு வாழ்த்து சொல்ல ரூம் அருகே அழைத்து செல்கிறாள்.
அந்த சமயம் அங்கு தீபாவும் வாழ்த்து சொல்ல வர அபிராமியை பார்த்ததும் மறைந்து கொள்கிறாள், இதனை பார்த்த நட்சத்திரா தீபாவை வெறுப்பேற்றுவது போல கார்த்திக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்கிறாள். அடுத்ததாக தர்மலிங்கம் குடும்பம் ஆட்டோவில் வந்து இறங்க ஐஸ்வர்யா உங்களை அவமானப்படுத்தவே இந்த தீபா இப்படி பண்ணி இருக்கா என்று ஏத்தி விடுகிறாள்.
மேலும் இவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என யோசிக்கும் ஐஸ்வர்யா மேலே சென்று பெயிண்டை எடுத்து வெள்ளை வேட்டி சட்டையில் ஊற்றி விடுகிறாள், இதனால் எல்லாரும் என்ன செய்வது என்று யோசிக்கின்றனர்.