Karthigai Deepam: பரமேஸ்வரி ஊரில் சாமுண்டீஸ்வரி! விருமனுடன் கைகோர்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் பரமேஸ்வரியின் ஊருக்கு சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் சென்றுள்ள நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். அதிகளவு ரசிகர்களை கொண்ட இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி குடும்பம் கோவில் திருவிழாவிற்காக பரமேஸ்வரி பாட்டி ஊருக்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மண்ணைத் தொட்டு வணங்கிய ராஜராஜன்:
அதாவது, லேடிஸ் எல்லாம் ஒரு காரில் கார்த்திக், ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் ஆகியோர் இன்னொரு காரில் என ஊரை நோக்கி வருகின்றனர். ஊருக்குள் நுழைந்ததும் ராஜராஜன் கீழே இறங்கி தனது சொந்த மண்ணை தொட்டு வணங்கி சந்தோசப்படுகிறார். சாமுண்டீஸ்வரி வந்தோமோ திருவிழா பார்த்தோமானு கிளம்பனும் என்று கண்டிஷன் போடுகிறாள்.
வரவேற்பை விரும்பாத சாமுண்டீஸ்வரி:
பரமேஸ்வரி பாட்டி சாமுண்டீஸ்வரியை வரவேற்க சாமுண்டீஸ்வரி நாங்க ஒன்னும் சொந்தம் கொண்டாடல வரல, கொடுத்த வாக்கை காப்பாற்ற வந்ததாக பதிலடி கொடுக்கிறாள். விருமன் எப்படியாவது இந்த கோவில் திருவிழாவை நிறுத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறான்.
இந்த சமயத்தில் அங்கு வரும் சிவனாண்டியும் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் விருமனுடன் கூட்டணி சேர்கிறான். விருமனின் உறவினர் இன்ஸ்பெக்டர் ஒருவரை அழைத்து இந்த திருவிழாவை நிறுத்த சொல்லி உதவி கேட்கிறான்.
பரமேஸ்வரி பேரனா?
கார்த்தியின் நண்பன் இளையராஜா ஓவர் பில்டப்புக்கு நடுவே காரில் வந்து இறங்க இவனா பரமேஸ்வரி பேரன் என குழப்பம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















