Karthigai Deepam: சாந்திமுகூர்த்தத்திற்கு நாள் குறித்த பரமேஸ்வரி.. சாவு முகூர்த்தத்திற்கு நாள் குறித்த காளியம்மாள்..!
கார்த்திகை தீபம் தொடரில் நவீன்துர்கா சாந்தி முகூர்த்தத்திற்கு பரமேஸ்வரி நாள் பாரக்கும் நிலையில், கார்த்தியை கொலை செய்ய காளியம்மாள் முயற்சிக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி நவீன் துர்காவை வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சாந்திமுகூர்த்தம்:
அதாவது, காளியம்மா ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறாள். சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் அவளை சந்திக்கின்றனர், அந்த சாமுண்டீஸ்வரியை எதாவது பண்ணனும் என்று சொல்ல, காளியம்மா தனது அடுத்த திட்டத்தை சொல்கிறாள்.
சந்திரகலா உடனே இதை செய்யணுமா? என்று கேட்க கார்த்தியை அழிக்கணும்னா இதை செய்து தான் ஆகணும் என்று சொல்கிறாள். தொடர்ந்து மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி ஜோசியரை வர வைத்து நவீன் துர்காவின் சாந்திமுகூர்த்தத்திற்கு நாள் குறிக்கிறார்.
சாமுண்டீஸ்வரி எச்சரிக்கை:
அப்படியே கார்த்திக் ரேவதிக்கும் நாள் குறிக்க கார்த்திக் இதெல்லாம் இப்போ எதுக்கு என்று கேட்க பாட்டி அமைதியா இரு என்று அவனை அடக்குகிறாள். அடுத்து சாமுண்டீஸ்வரி ஜெயிலில் இருக்கும் மாயாவை சந்தித்து, ரேவதியை கொல்ல தான் நீ வந்து இருக்க.. அவ மேல உன் மூச்சு காத்து கூட பட கூடாது என்று வார்னிங் கொடுக்கிறாள்.
சந்தேகத்தில் சாமுண்டீஸ்வரி:
மாயா உன் மாப்பிள்ளை ராஜா தான் ராஜா சேதுபதியோட பேரன், அந்த உண்மை கூட தெரியாமல் இருக்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி நம்நப மறுக்கிறாள். ஆனால் வீட்டிற்கு வந்த அவள் அதே யோசனையில் இருக்கிறாள். கான்ஸ்டபிளில் பேத்தியை கூப்பிட்டு உனக்கு ஏதாவது உதவி வேணும்னா கேளு என்று சொல்ல ராஜா ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்து விட்டதாக சொல்ல சாமுண்டீஸ்வரி மாயா சொன்னது உண்மையா இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடை காணலாம்.





















