Karthigai Deepam: காதலைச் சொல்ல துடிக்கும் ரேவதி.. சிவனாண்டியை மடக்கிப் பிடித்த கார்த்திக் - இன்று இதுதான்!
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தேர்தலில் சாமுண்டீஸ்வரி ஜெயித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துர்காவைத் திட்டும் ரேவதி:
அனைவரும் சாமுண்டீஸ்வரி வெற்றியை கொண்டாட ரேவதி கார்த்தியை காதலுடன் பார்த்து ரசிக்கிறாள். இதையடுத்து கண்ணில் தூசி விழுந்து விட்டதாக சொல்லி கார்த்தியிடம் உதவி கேட்கிறாள். நாக்கை வைத்து கண்ணில் இருக்கும் தூசியை எடுக்கலாம் என்று சொல்ல, கார்த்திக் ஒரு நிமிடம் என்று வெளியே செல்கிறான்.
வெளியே வந்தவன் துர்காவை அழைத்துச் செல்ல ரேவதி அவளை பார்த்து நீ எதுக்கு வந்த வெளிய போ? என்று திட்டுகிறாள். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி சொன்னது போல எல்லாருக்கும் தாலிக் கொடுக்கின்றனர்.
சிவனாண்டியை மடக்கிய கார்த்திக்:
சந்திரகலா சிவனாண்டிக்கு ஃபோன் போட்டு மறைமுகமாக இருக்கவும் எனவும் சொல்ல, சிவனாண்டி எஸ்கேப் ஆக முயற்சி செய்ய கார்த்திக் மடக்கி பிடித்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பதை இன்றைய எபிசோடில் காணலாம்.





















