Karthigai Deepam: வளையல் போட வரும் கார்த்தி! கைதாகிறாரா ராஜராஜன் - கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று ராஜராஜனை போலீஸ் கைது செய்ய வருவதால் பரபரப்பான கட்டத்தை சீரியல் எட்டியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி ரேவதியிடம் கார்த்தி மீது தவறில்லை என்று பேசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
குழப்பத்தில் சாமுண்டீஸ்வரி:
அதாவது, இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளை வைத்து சாமுண்டீஸ்வரி இவனா பரமேஸ்வரி பேரன் என குழப்பம் அடைகிறாள். இதனை தொடர்ந்து பாட்டி ரேவதிக்காக வளையல் வாங்கி வருகிறாள். உடனே கார்த்திக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்கிறாள். உனக்கு வளையலை நான் போட்டு விட்டு என்ன பயன்? உன் புருஷன் தானே போட்டு விடணும் என்று சொல்லி கார்த்தியை வர வைக்கிறாள். பிறகு கார்த்திக் வந்ததும் அவனிடம் வளையலை கொடுத்து போட்டு விட சொல்கிறாள். கார்த்தியும் மறுக்க முடியாமல் போட்டு விடுகிறான்.
ராஜராஜனை வம்பிழுக்கும் விருமன்:
இன்னொரு பக்கம் விருமனின் ஏற்பட்டால் அவனது சகலை இன்பெக்டர் ராஜராஜனிடம் உன் பொண்டாட்டி நல்லா அழகா இருக்கிறதுனால தான் உன் அம்மா அப்பாவை விட்டு ஓடிட்டயா? என்று வம்பு இழுக்கிறான். மேலும் உன் பொண்ணுங்களும் அழகா தான் இருக்குங்க என்று பேச ராஜராஜன் கோபப்பட்டு அடிக்க பாய்கிறார்.
இதனால் இன்ஸ்பெக்டர் என்னையே அடிக்க பாயுறயா? உன்ன சும்மா விட மாட்டேன் என்று கைது செய்ய முயற்சி செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















