புருஷனை விட்டுச்செல்ல ரேவதி போடும் ப்ளான்! வார்னிங் கொடுத்த கார்த்திக்! இன்று நடப்பது இதுதான்
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.

Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இதுவரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இன்று முதல் இரவு 9:15 முதல் 10 மணி வரை என 45 நிமிடங்களாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி ஊருக்கு வந்து சேர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
வெளிநாடு செல்லும் ரேவதி?
அதாவது ரேவதி தனது தோழிக்கு போன் செய்து வெளிநாட்டுக்கு வந்துவிடலாம் என்று இருப்பதாக சொல்ல அவள் என்னுடைய கம்பெனியில் கூட வேலை வாங்கி தரேன் ஒன்னும் பிரச்சனை இல்ல.5 ஆனா நீங்க வந்துட்டா 5 வருஷம் இங்க தான் இருக்க வேண்டி இருக்கும் என்று சொல்கிறாள்.
மாயாவை எச்சரிக்கும் கார்த்திக்:
யோசித்துப் பார்த்த ரேவதி என்னால முடியல நான் வந்துடுறேன் என்று முடிவெடுக்கிறாள். அதைத்தொடர்ந்து கார்த்திக் மாயா வீட்டிற்கு சென்று மாயாவை பிடித்து திட்டி விடுகிறான். மகேஷ் காணவில்லை என்றால், அவன் காணாமல் போன இடத்தில் போய் தேடு.. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்ன பிறகும் நீ ரேவதி மேல கை வைக்கிறது ரொம்ப தப்பு என எச்சரிக்கிறான்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரேவதி விசா ஆஃபீஸ்க்கு வருகிறாள். விசா அப்ளை செய்ய அங்கிருந்த ஆபீஸர் ஏதாவது உற்றுப் பார்த்துவிட்டு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேள்வி கேட்க ரேவதி ஆகிவிட்டது என்று சொல்கிறாள்.
அப்படி என்றால் திருமண சான்றிதழ் எங்கே? என்று கேட்க ரேவதி அதிர்ச்சி அடைகிறாள். கண்டிப்பா அதை வைக்கணுமா என்று கேட்க ஆஃபீஸர் கண்டிப்பாக வைக்க வேண்டும் என கூறுகிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















