சிவகாமி சாவுக்கு காரணம் யாரு? உண்மையை தெரிந்து கொள்வாளா சாமுண்டீஸ்வரி? கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீீபம் தொடரில் முத்துவேல் சிறையில் இருந்து வெளியில் வந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதியை அபிராமி கோவிலுக்கு வர சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பரிகாரம்:
அதாவது, அபிராமி சித்தரை பார்த்ததாகவும் அவர் நீங்க இரண்டு பேரும் 5 வருடம் பிரிந்து இருக்க போவதாகவும் அதை தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் சொன்னதாக சொல்கிறாள். பிறகு இருவரும் மறுக்க முடியாமல் பரிகாரம் செய்கின்றனர்.
பிறகு ரேவதி கார்த்தியிடம் நீங்க தான் உங்க அம்மா கிட்ட சொன்னீங்களா என்று சத்தம் போடுகிறாள். கார்த்திக் இல்லை என்று மறுக்கிறான். அடுத்து ராஜசேதுபதி ஊரில் இல்லாத காரணத்தால் கோவில் நகைகளை பேங்கில் இருந்து எடுத்து வர கார்த்திக் கையெழுத்து போட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
ஜெயிலில் இருந்து வந்த முத்துவேல்:
கார்த்திக் இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்ல, சந்திரகலா சிவனாண்டி இந்த விஷயம் அறிந்து கார்த்தியை மாட்டி விட திட்டம் போடுகின்றனர், ஆனால் கார்த்தி அந்த விஷயத்தையும் முறியடிக்கிறான்.
இதையடுத்து சிவனாண்டியின் சித்தப்பா முத்துவேல் என்பவன் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வர சாமுண்டீஸ்வரி, நீ ஜெயிலுக்கு போகவே நான் தான் காரணம்.. உஷாரா இரு என்று எச்சரிக்கிறாள். அடுத்து கார்த்தியை பார்த்த முத்துவேல் சிவனாண்டியிடம் யார் அது என்று விசாரித்து ராஜசேதுபதியின் மகன் என தெரிந்து கொள்கிறான்.
சிவகாமி சாவுக்கு காரணம்..
தொடர்ந்து முத்துவேல் சிவனாண்டியிடம் சாமுண்டேஸ்வரி அம்மா சிவகாமி சாவுக்கு ராஜசேதுபதி காரணம் இல்ல, நான் தான் விஷத்தை கொடுத்து கொன்னேன் என்று பிளாஷ்பேக் கதையை சொல்கிறான். இந்த விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய கூடாது என்று சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















