Anna Serial: முத்துபாண்டிக்கு எதிராக சண்முகத்துக்கு கிடைத்த ஆயுதம்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர் பஞ்சாயத்தில் ஷண்முகம் குடும்பத்திற்கு ஒரு நாள் டைம் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வீட்டில் தங்கைகள் எல்லாரும் துணிமணிகளை எடுத்து பேக் செய்து கொண்டிருக்க வீட்டிற்கு வரும் ஷண்முகம் இந்த கல்யாணம் நடக்காது, ஊரை விட்டு போக முடியாது, அவங்க முன்னாடி நாம வாழ்ந்து காட்டனும் என வீரமாக பேசுகிறான்.
அடுத்ததாக முருகன் கோவிலுக்கு வரும் ஷண்முகம் தினமும் உன்னை பார்க்க லட்ச கணக்கான மக்கள் வராங்க, ஆனால் அவங்க எல்லாரும் டூரிஸ்ட், நான் உன்னை அப்படி பாக்கல, காலையில எழுந்ததும் நான் பாக்குற முகம் நீதான், அதே போல் நைட் தூங்குறதுக்கு முன்னாடி பாக்குற முகமும் நீ தான் என்று சொல்கிறான். ஆனால் நீ என்னை ரொம்ப சோதிக்கற, என்னை சோதிச்சாலும் பரவாயில்ல, என் தங்கச்சிகளை சோதிக்கற.. எனக்கு ஒரு தீர்வு சொல்லாமல் நான் இங்க இருந்து போக மாட்டேன் என்று கோவிலில் அப்படியே உட்கார இரவாகிறது.
திடீரென முருகன் ஒரு சிறு பிள்ளையாக ஷண்முகம் முன்பு தோன்ற அவன் தடுமாறி கீழே விழ போக அப்போது கீழே ஒரு போனில் வீடியோ ஒன்று ஓடுகிறது, அந்த வீடியோவில் முத்துப்பாண்டி ஒரு பெண்ணை அறைந்த காட்சிகள் தான் போகிறது. அடுத்து ஒரு ஆள் வந்து இது என்னுடைய போன் என்று கேட்கிறார்.
மேலும் அப்போ அங்கு வெட்டுக்கிளியும் வர ஷண்முகம் அந்த வீடியோவை வாங்கி கொண்டு வெட்டுக்கிளியை கூட்டி கொண்டு சௌந்தரபாண்டி வீட்டின் பின்பக்கமாக வருகின்றனர், வெட்டுக்கிளி இப்போ எதுக்கு இங்க வந்தோம் என்று கேட்க பரணியிடம் இந்த வீடியோவை காட்டி என்ன செய்வது என்று பேச வேண்டும் என்று சொல்லி ஏணி வழியாக ஷண்முகம் மேலே ஏறி வர அப்போது கால் பட்டு பூ தொட்டி கீழே விழுந்து சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்து கொள்கின்றனர்.
ஷண்முகம் பரணியின் ரூமுக்குள் ஓடி விட சௌந்தரபாண்டிக்கு ஏதோ சந்தேகம் வர பாக்கியம் பூனையா இருக்கும் என்று சொல்லி அழைத்து செல்கிறாள், ரூமில் சண்முகத்தை பார்த்த பரணி பயந்து சத்தம் போட சௌந்தரபாண்டி ரூமுக்குள் நுழைய ஷண்முகம் ஒளிந்து கொள்கிறான்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன எனது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.