Anna Serial: உயிரை விட்ட கவிதா.. உச்சகட்ட கோபத்தில் ஷண்முகம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னா கழுத்தில் தாலி கட்ட ஷண்முகம் உட்பட எல்லாரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஆக்ரோஷத்துடன் வீட்டிற்கு வந்த ஷண்முகம் தன் தலை மீது தண்ணீரை ஊற்றி கொண்டு இது கல்யாணமே கிடையாது, அவன் கட்டின தாலியை அறுத்து போடு என்று சொல்ல பாக்கியம் ஒரு பொண்ணுக்கு ஒரு முறை தாலி ஏறணும் என தடுத்து நிறுத்துகிறாள். உன் பிள்ளை என்பதால் இப்படி சொல்றியா? என்று கேட்க அன்னைக்கு பரணி கழுத்தில் தாலி கட்ட அவ அறுத்து போட போகும் போதும் இது தான் சொன்னேன் என்று சொல்கிறாள்.
புருஷன் இருந்தா தானே தாலியோட இருக்கணும், உன் புள்ளையை கொன்னுட்டு வரேன் என்று ஆக்ரோஷமாக கிளம்பி வர இசக்கி என்னால் தான் என் அண்ணனுக்கு பிரச்சனை என்று தற்கொலை செய்து கொள்ள துணிய பரணி அவளை அறைந்து நாங்க வழி பண்ணாமலா விட்டுடுவேன் என்று அறிவுரை கூறுகிறாள்.
கோவிலுக்கு வந்த ஷண்முகம் முருகனை பார்த்து என்னை நீ கை விட்டுட்ட, முத்துப்பாண்டி விரோதினா, நீ துரோகி என திட்டுகிறான். மறுபக்கம் சௌந்தரபாண்டி ரத்னா யாருனு கூடவா தெரியல என்று முத்துபாண்டியை அடி வெளுக்க சிவபாலன் உச்சகட்ட கோபத்தில் கத்தியால் குத்த வர ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆகிறான் முத்துப்பாண்டி. சனியன் அந்த ஷண்முகம் விட்டாலும் இவன் விட மாட்டான் போலயே என்று சொல்கிறான்.
அடுத்து கவிதா மருந்து குடித்து விட்டு உயிருக்கு போராட அவளை பரணியின் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகின்றனர். உயிர் போகும் நிலையில் அவள் சண்முகத்தை பார்க்க வேண்டும் என சொல்ல ஷண்முகம் இங்கு வருகிறான். அந்த முத்துப்பாண்டி என் வாழ்க்கையையும் அழிச்சிட்டான், உன் தங்கச்சி வாழ்க்கையையும் அழிச்சிட்டான். அவனை விட்டுடாத, இசக்கி பாவம். அந்த முத்துபாண்டியை கொன்னுடு என்று சொல்லி உயிரை விடுகிறாள்.
இதனால் ஷண்முகம் சூலாயுதத்தை எடுத்து கொண்டு பயங்கர கோபத்துடன் முத்துபாண்டியை கொல்ல கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.