Baakiyalakshmi: கோபியை நோஸ் கட் செய்த பாக்கியா.. செழியனை மிரட்டும் மாலினி - பாக்கியலட்சுமியில் இன்று
குழந்தையை மறைத்து வைத்து விளையாடியதால் வீட்டை விட்டு மாலினியை விரட்டிய பாக்கியா. மீண்டும் போட்டோவை காட்டி செழியனை மிரட்டும் மாலினி. இன்றைய பாக்கியலட்சுமியில் என்ன நடந்தது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) சீரியலின் இன்றைய (அக்டோபர் 26 ) எபிசோடில் குழந்தையை காணவில்லை என ஒட்டுமொத்த குடும்பமும் பதறி போய் அங்கும் இங்கும் தேடி அலைகிறார்கள். அப்போது மிகவும் கூலாக சென்று குழந்தையை கொண்டு வந்து, சும்மா பிராங்க் பண்ணேன் என மாலினி சொல்ல அவளை அனைவரும் பயங்கரமாக திட்டி விடுகிறார்கள். "குழந்தையை வைத்தா விளையாடுவது" என ஜெனி பதட்டத்தில் மாலினியை திட்டுகிறாள்.
மிகவும் டென்ஷனான பாக்கியா "நீ எதுக்கு அடிக்கடி வீட்டுக்கு வர. இனிமேல் வீட்டுக்கு வர வேலையை வச்சுக்காத. எதுவாக இருந்தாலும் ஆபிஸ்ல வைச்சே பேசிக்கோ" என சொல்லி மாலினியை திட்டி அனுப்பி விடுகிறாள் பாக்கியா. மாலினியும் முறைத்து கொண்டே வீட்டை விட்டு சென்று விடுகிறாள்.
கோயிலில் திருவிழாவுக்கான மொத்த செலவையும் நானே ஏற்று கொள்கிறேன் என சொல்லி கோயில் நிர்வாகிகளிடம் பேசி கொண்டு இருக்கிறார் பழனிச்சாமி. அப்போது சமைப்பதற்காக யாரையாவது ஏற்பாடு செய்து இருக்கிறார்களா? என்பதை விசாரித்து விட்டு யாரையும் இன்னும் முடிவு செய்யவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு பாக்கியாவை அந்த கேட்டரிங் ஆர்டருக்கு சிபாரிசு செய்து வைக்கிறார் பழனிச்சாமி.
மாலினிக்கு சப்போர்ட் செய்யும் கோபி:
வீட்டில் மாலினியை அவமானப்படுத்தி அனுப்பியதற்காக மாலினிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார் கோபி. இதனால் செழியனுடைய வேலைக்கு தான் பிரச்சினை வரும் என கோபி சொல்ல ஜெனி பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக "ஆண்ட்டி செய்தது தப்பே இல்லை. எனக்கே மாலினி மேலே பயங்கர கோபம் வந்தது" என சொல்ல "மனுஷங்க மேல கொஞ்சமாவது நம்பிக்கை வைக்கணும்" என நல்லவ போல பேசுகிறார் கோபி. அப்போ ஜெனிக்கு ஜூஸ் கொடுக்க வந்த பாக்கியா "நம்பி நம்பி ஏமாந்தது எல்லாம் போதும். அந்த பொண்ணோட பேச்சும் நடவடிக்கையும் சரியில்லை. இங்க நம்பிக்கை வைக்குற அளவுக்கு யாரும் யோக்கியமானவங்க கிடையாது" என சரியான நோஸ்கட் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறாள் பாக்கியா.
செழியன் மாலினி வீட்டுக்கு வந்து அவளை பயங்கரமாக திட்டுகிறான். "நான் கொஞ்ச நாள் புத்தி மாறி போயிருந்தேன். அதனால் என்னோட குடும்பம் என்னோட குழந்தை எல்லாம் ஏன் பாதிக்கப்படணும். நீ எதுக்காக எங்க வீட்டுக்கு வரணும். இனிமே போட்டோவை காட்டி மிரட்டுற வேலையெல்லாம் வச்சுக்காத" என மாலினியிடம் சொல்கிறான் செழியன்.
"நான் கெட்டவ எல்லாம் கிடையாது, நீ எனக்கு ரொம்ப முக்கியம். நீ எனக்கு வேணும். அதனால் என்ன பண்ணறது என தெரியாமல் இப்படி எல்லாம் பண்றேன். நீ என்னை விட்டு தள்ளி போனால் இந்த போட்டோஸ் எல்லாத்தையும் நான் ஜெனிக்கும், உன்னோட அம்மாவுக்கும் அனுப்பி வைச்சுடுவேன். உங்க வீட்டு ரோட்ல போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவேன்" என போட்டோக்களை காட்டி மீண்டும் செழியனை மிரட்டுகிறாள் மாலினி. பதட்டமாக இருந்த செழியனை "நீ எனக்கு வேணும்" என சொல்லி கட்டி பிடித்து கொள்கிறாள் மாலினி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.