TRP Rating 25th week: சிங்கப்பெண்ணே சிம்மாசனத்தை கைப்பற்றிய கயல்; இந்த வாரம் டி.ஆர்.பி நிலவரத்தில் அதிரடி மாற்றம்...
TRP Rating 25th week : 25வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்களை நாள் முழுவதும் மிகவும் என்டர்டெய்ன்மென்ட்டாக வைத்திருக்கும் மொத்த பெருமையும் சீரியல்களை தான் சேரும். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தது என்பதை அதன் டி.ஆர்.பி ரேட்டிங் வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் அதிரடி மாற்றத்துடன் 25வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. முதல் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராமாயணம்' சீரியல் 5.05 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் இருக்க பல வாரங்களுக்கு பிறகு ஜீ தமிழின் 'கார்த்திகை தீபம்' சீரியல் 5.30 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் 6.14 புள்ளிகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' 8வது இடத்தில் உள்ளது. 6.62 புள்ளிகளை பெற்று 7வது இடத்தை இடத்தை சன் டிவியின் 'சுந்தரி' சீரியலும் விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' சீரியலும் பகிர்ந்து கொள்கிறார்கள். மல்லி சீரியல் 6.88 புள்ளிகளுடன் 6 வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த வாரம் இந்த தொடர் 8வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.71 புள்ளிகளுடன் சிறகடிக்க ஆசை ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்நீச்சல் தொடர் முடிவடைந்த பிறகு தொடங்கப்பட்ட 'மருமகள்' சீரியல் 7.85 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 'வானத்தை போல' சீரியல் 7.89 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது வரையில் பல வாரங்களாக முதல் இடத்தில் நிலையாக இருந்து வந்த 'சிங்கப்பெண்ணே' தொடர் 8.74 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் 8.80 புள்ளிகளை பெற்று சிம்மாசனத்தில் குடியேறியுள்ளது 'கயல்' தொடர். வாராவாரம் இந்த போட்டி பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையில் மட்டுமே நடைபெறும். ஆனால் இந்த முறை இந்த ரேஸில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'கார்த்திகை தீபம்' சீரியல் இடம்பிடித்துள்ளது நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்த டி.ஆர்.பி ரேட்டிங் 25வது வாரத்துக்கானது மட்டுமே. வரும் வாரங்களில் இதில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.