மேலும் அறிய

Ethirneechal : ரணகளமான குணசேகரன் வீடு... வெண்பாவால் வெடித்த புது பிரச்சினை... எதிர்நீச்சலில் நேற்று நடந்தது என்ன?

Ethirneechal Sep 26 : நந்தினியின் பிசினஸை நாசமாக்கிய கதிர். மகன்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த விசலாட்சி அம்மா. வெண்பாவால் ஈஸ்வரிக்கு வந்த புது பிரச்சினை. எதிர்நீச்சலில் நேற்று என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் முதியோர் ஹோமுக்குக்காக சமைத்து வைத்திருந்த உணவு பாத்திரங்களை பார்த்த கதிர் என்ன இதெல்லாம் என கேட்டு திறந்து பார்க்கிறான் கதிர். நந்தினி திணற விசாலாட்சி அம்மா நான் சொல்கிறேன் என் சொல்லி உண்மையை உடைத்துவிடுகிறார். 

Ethirneechal : ரணகளமான குணசேகரன் வீடு... வெண்பாவால் வெடித்த புது பிரச்சினை... எதிர்நீச்சலில் நேற்று நடந்தது என்ன?

ஆத்திரமடைந்த கதிர் நந்தினியை அறைந்து "களவாணி வேலை செய்றியா? மூணு பேரையும் தொலைச்சிப்புடுவேன்" என்கிறான். ஹோமில் இருந்து போன் செய்தவரை திட்டி போனை தூக்கி போடுகிறான் கதிர். அவர்களை திட்டி விரட்டிவிடுகிறாள் ரேணுகா. "அங்க எல்லாரும் சாப்பிடாம இருப்பாங்களே" என சொல்லி உடைந்து அழுகிறாள் நந்தினி. 

விசாலாட்சி அம்மாவை ஞானம் திட்டுகிறான். "எல்லாருக்கும் பயம் போயிடுச்சு. அதுக்கு காரணம் நீ தான்" என்கிறான். "நீங்களும் ஆரம்பிச்சிடீங்களா தம்பி?" என ஈஸ்வரி கேட்கிறாள். "இனிமேல் நானும் ஆரம்பிச்சுட்டேன். நீங்க எல்லா மாறல. எல்லாருமா சேர்ந்து எங்க அண்ணனை வீட்டை விட்டு அனுப்பிட்டீங்க இல்ல. இந்த வீட்ல இனிமே எல்லாமே ஆம்பளைங்க சொல்றது தான். எல்லாரும் பழைய வீட்ல இருந்தது போல திரும்பி மாறனும். இன்னும் இரண்டே நாளில் அண்ணன் வந்துடுவார். அதுக்குள்ள எல்லாரும் முடிவு எடுத்துக்கங்க" என கத்துகிறான் ஞானம். இது அனைத்தையும் பார்த்து கதிர் சிரித்து கொண்டு இருக்கிறான். 

ஹோமில் இருந்து வந்த மேற்பார்வையாளர் நந்தினியிடம் வந்து இன்னும் சாப்பாடு எடுத்து வரவில்லை என கேட்கிறார். அந்த பெண்ணிடமும் மரியாதை இல்லாமல் கதிர் பேசுகிறான். "கைநீட்டி காசு வாங்கி இருக்காங்க. அட்வான்ஸ் கொடுத்து இருக்கோம். அதுக்கு யார் பதில் சொல்லுவா?" என்கிறார். நந்தினி எவ்வளவு கெஞ்சியும் அந்த அம்மா "நம்ப வைச்சு ஏமாத்திட்டீங்க இல்ல" என கத்துகிறார். அட்வான்ஸ் பணத்தை கேட்டதால் நந்தினி தாலி செயினை கழற்ற விசாலாட்சி அம்மா வந்து நந்தினியை அறைகிறார்.

Ethirneechal : ரணகளமான குணசேகரன் வீடு... வெண்பாவால் வெடித்த புது பிரச்சினை... எதிர்நீச்சலில் நேற்று நடந்தது என்ன?
"கட்டின புருஷன் குத்துகல் மாதிரி இருக்கிறான் நீ தாலியை கழற்ற" என்கிறார். "என்ன பொறுத்த வரைக்கும் இது வெறும் செயின் தான். அவங்க எங்களுக்கு மரியாதை கொடுத்தா நாங்களும் கொடுப்போம். இது எங்க அப்பா போட்ட செயின். இதை என்ன வேணாலும் பண்ண எனக்கு உரிமை இருக்கு" என்கிறாள். ஹோமில் இருந்து வந்த லேடி "நாளை காலை வரை உங்களுக்கு டைம். அதுக்குள்ள பணத்தை கொடுக்கவில்லை என்றால் போலீஸோடு தான் வருவோம்" என சொல்லிவிட்டு செல்கிறார். 

விசாலாட்சி அம்மாவிடம் "உங்க பெரிய புள்ள காணாம போனது ஒரு ட்ராமா. எங்க வயித்து எரிச்சல், அங்க பசியோட இருக்காங்க பாருங்க அவங்களோட வயித்து எரிச்சல் எல்லாம் உங்களை சும்மா விடாது" என கத்திவிட்டு செல்கிறாள். 

Ethirneechal : ரணகளமான குணசேகரன் வீடு... வெண்பாவால் வெடித்த புது பிரச்சினை... எதிர்நீச்சலில் நேற்று நடந்தது என்ன?

மாடிக்கு சென்ற கதிர் வெண்பாவும் தாராவும் விளையாடுவதை பார்த்து யார் இந்த பொண்ணு என கேட்கிறான். "இது எங்க அம்மாவோட பிரெண்டோட பொண்ணு " என்கிறாள் தர்ஷினி. கதிர் உடனே நந்தினியையும் மற்றவர்களை அழைக்கிறான். ஈஸ்வரி வந்து "என்ன இங்க  சத்தம். என்ன ஆச்சு?" என கேட்கிறாள். "எந்த பிரெண்டு? இது யாரோட  குழந்தை" என கேட்கிறான். கரிகாலன் கதிரை ஏத்தி விட கதிர் தேவையில்லாமல் பேசுகிறான். "உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என ஈஸ்வரி சொல்ல "இது எங்க வீடு. அது எப்படி சம்பந்தம் இல்லை" என்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget