Ethirneechal : நேத்து நந்தினி இன்னிக்கு ஈஸ்வரி... வசமாக மாட்டிக்கொண்டு முழிக்கும் மருமகள்கள்... எதிர்நீச்சலில் அடுத்த மூவ் என்ன?
Ethirneechal Sep 27 episode : ஈஸ்வரி வேலை பார்க்கும் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்து பெரிய ரணகளமாக மாறுகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் ஈஸ்வரியிடம் "கண்டவங்க பிள்ளைகளுக்கு எல்லாம் இங்க சோறு போட்டு வளர்க்க முடியாது. இன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா இந்த புள்ள இங்கிருந்து கெளம்பனும். இல்லனா அவ்வளவுதான்" என ஈஸ்வரியை மிரட்டிவிட்டு செல்கிறான் கதிர்.
வெண்பா மிகவும் வருத்தமாக வந்து "என்னால தான் உங்களுக்கு பிரச்சினையா ஈஸ்வரி அம்மா" என்று ஈஸ்வரியிடம் கேட்கிறாள். அவளை சமாதானம் செய்து விளையாட அனுப்பி வைக்கிறார்கள்.
வீட்டு பெண்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது நந்தினி மிகவும் சங்கடப்பட்டு பேசுகிறாள். "நான் கஷ்டப்படுறது கூட பரவாயில்லை. பாவம் அவங்க எல்லாரும் பட்டினியா இருந்து இருப்பாங்க அதை நினைக்கும் போது தான் கஷ்டமா இருக்கு. சாரி ஜனனி என்னை மன்னிச்சுடு. எனக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை வாங்கி கொடுத்த ஆனா அதை காப்பாத்திக்க துப்பில்லாதவளா போயிட்டேன்" என ஜனனியிடம் மன்னிப்பு கேட்கிறாள்.
ஜனனி நந்தினியை சமாதானம் செய்கிறாள். "இது வெறும் இரு தடங்கல் அவ்வளவு தான். இத்தோட எல்லாம் முடிஞ்சதா அர்த்தம் இல்லை. அதில் இருந்து எப்படி மீண்டு வெளியில் வருவது என்பதை மட்டும் யோசியுங்கள்" என்கிறாள். அப்போது தர்ஷினி, ஐஸ்வர்யா, தாரா என அனைவருமே "உங்களுக்கு மரியாதை கிடைக்காத இடத்தில் நீங்க இருக்காதீங்க. நீங்க இல்லனா இந்த வீடு எப்படி இருக்கும் என அவங்களுக்கு புரியனும், உங்களால எங்க சந்தோஷமா இருக்க முடியுமோ அங்கே போங்க. எங்களை பத்தி கவலை படாதீங்க. நாங்க எங்களை பார்த்து கொள்கிறோம்" என்கிறார்கள். "ஜனனி சித்தி நீங்க தானே ஐடியா குடோன். பட்டுனு ஏதாவது யோசிச்சு டக்குனு இவங்க எல்லாரையும் தூக்குங்க" என்கிறாள் தாரா.
அடுத்த நாள் காலை ஈஸ்வரியை தேடி ஒரு பெண் வருகிறார். "அடுத்த வாரம் ஈஸ்வரி மேடமுக்கு காலேஜில் ஒரு லெக்ச்சர் இருக்கு. அத சொல்றதுக்காக தான் வந்தேன்" என சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "வீட்ல யாருக்கும் தெரியாம களவாணி தனம் பண்றீங்களாடி. எத்தனை நாளா இது நடக்குது? என்னோட பிள்ளையை மரியாதை இல்லாம பேசி வீட்டை விட்டு அனுப்பிட்ட. அதை பத்தி கொஞ்சகூட கவலை படல. நீயும் உன்னோட பிள்ளைகளும் ஊதாரி தனம் பண்றதுக்கு திருட்டுத்தனமா காசு சேக்குறீங்களா" என விசாலாட்சி அம்மா ஈஸ்வரியை திட்டுகிறார்.
"இந்த வீட்டுக்கு பொம்பளைங்க இனிமே வீட்டு வாசலை தாண்ட மாட்டாளுங்க. அவ எங்கேயும் வரமாட்டா வரவும் முடியாது. இனிமே இவளுங்கள தேடிகிட்டு யாரும் வரக்கூடாது" என சொல்லி அந்த பெண்ணை விரட்டி விடுகிறார்கள். ஞானம் ரேணுகாவிடம் போய் "இன்னும் நீ என்ன திருட்டுத்தனம் செய்யுறனு தெரியல. தெரிஞ்சதுக்கு அப்புறம் சந்தி சிரிச்சுடும் ஜாக்கிரதை" என சொல்லிவிட்டு செல்கிறான்.
கதிர் வெண்பா இருப்பதை பார்த்து முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.