Ethirneechal : காவாலா பாட்டுக்கு வைப் செய்த குணசேகரன்... அதிர்ச்சியில் ஞானம் , கதிர்... திசைமாறும் எதிர்நீச்சல் சீரியல்..!
Ethirneechal : பிளாஷ்பேக் கதைகளை சொல்லி ஒரே கலகலப்பாக பேசும் குணசேகரன் காவலயா... பாடலை கேட்டு என்ஜாய் செய்வதை பார்த்து ஷாக்காகும் தம்பிகள் போன்ற காட்சிகள் நேற்றைய எபிசோடில் இடம் பெற்றது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தம்பிகளை போலீஸ் அடித்ததால் மிகவும் வருத்தமாக இருக்கிறார். "நானே என்னுடைய தம்பிகளை கை நீட்டி அடித்ததில்லை. அவன் எப்படி அடிக்கலாம். என்னுடைய பலவீனத்தை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்கள். என்னுடைய தம்பிகள் தான் எனக்கு எல்லாமே என்பதை தெரிந்து என்னை தாக்குகிறார்கள்" என்கிறார் குணசேகரன்.
பிறகு குணசேகரன் பஸ் கண்டக்டராக இருக்கும் போது நடந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களை பற்றி எல்லாம் சந்தோஷமாக சொல்லி கொண்டு இருக்கிறார். குணா குணா என அவர் பின்னாடியே காலேஜ் பொண்ணுங்க எல்லாம் அவர் பின்னாடியே சுத்தி வருவர்களாம். அதை பார்த்து காலேஜ் பயலுங்க எல்லாம் கடுப்பாவர்களாம். என தன்னுடைய பிளேஷ்பேக் கதைகளை தம்பிகளிடம் சொல்லி கொண்டு இருக்கிறார்.
"எத்தனை பேர் என் பின்னால வந்தாலும் நான் விருப்பப்பட்டது எல்லாம் சாரு பாலா மேல தான் ஆனா அவ தான் எனக்கு துரோகம் பண்ணிட்டு அந்த எஸ்.கே.ஆர கல்யாணம் பண்ணிக்கிட்டா" என குணசேகரன் சொன்னதும் கடுப்பான ஜனனி "உங்களுக்கு பிடிச்சா வந்துரணுமா. அவங்களுக்கு விருப்பம் இருக்காதா? மத்தவங்கள பத்தி நீங்க கவலை படவே மாட்டீங்களா? எப்ப தான் நீங்க திருந்தபோறீங்களோ" என சொன்னதும் அவளை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள்.
வீட்டில் விசாலாட்சி அம்மா வீம்பாக சாப்பிட மாட்டேன் என சொல்லி பட்டினியாக இருக்கிறார். அதனால் அவருக்கு தலைசுற்றல் ஏற்படுகிறது. அதை பார்த்த தாரா சாப்பிட தோசை எடுத்து வந்து கொடுத்தாலும் பெரியவன் வரும் வரை நான் சாப்பிட மாட்டேன் என வீராப்பாக இருக்கிறார். அப்போது தர்ஷனுக்கு போன் செய்து விசாலாட்சி அம்மாவிடம் குணசேகரன் வீட்டுக்கு வந்து கொண்டு இருப்பதை பற்றி சொல்கிறான். அதை கேட்டு சந்தோஷமான விசாலாட்சி அம்மா குடுங்கடி நான் தோசையை சாப்பிடுறேன் என சாப்பிடுகிறார்.
காரில் வந்து கொண்டு இருக்கும் போது ஈஸ்வரி கை நீட்டி அறைந்ததை பற்றி கதிர் குணசேகரனிடம் சொன்னதும் அவர் ரியாக்ஷன் காத்திருக்கும் ஞானத்திற்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஜெயிலர் படத்தின் 'காவலையா...' பாடலை என்ஜாய் செய்து கேட்கிறார். உங்களுக்கு பழைய பாட்டு தானே அண்ணே பிடிக்கும் என கேட்டால் ஆளே மாறி வந்து இருக்கேன் புதுசா மாற வேண்டியது தான். பாட்டு நல்லா தானே இருக்கு என ஷாக் கொடுக்கிறார்.
குணசேகரன் வீட்டுக்கு வருவதால் விசாலாட்சி அம்மா வீட்டில் ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். மருமகள்களையும், பேத்திகளை டிரஸ் மாத்திக்கிட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு கீழே சீக்கிரமா வரச்சொல்கிறார். அதற்கு நந்தினி "அவங்க என்ன எங்களை பொண்ணு பார்க்கவா வராங்க. ஒரு தடவை வந்து பார்த்ததுக்கே எங்க வாழ்க்கை நாசமா போனது பத்தாதா?" என நக்கலாக கேட்கிறாள். கடுப்பான விசாலாட்சி அம்மா என்னடி உங்களுக்கு ஒரு முடிவு தெரியணும் அவ்வளவு தானே... பெரியவன் வரட்டும் சாவகாசமா பேசி உங்களுக்கு ஒரு முடிவை கட்டுறேன்" என்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.