Ethirneechal: விசாலாட்சியிடம் வத்திவைத்த ஜான்சி.. குணசேகரன் பிளானை ஒட்டுக்கேட்ட நந்தினி.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Nov 2: ஈஸ்வரி ஒரு குழந்தையை அழைத்து வந்ததைப் பற்றி விசாலாட்சி அம்மாவிடம் போட்டு கொடுத்த ஜான்சி ராணி.. குணசேகரனின் பிளான் என்ன என்பதை ஒட்டுக்கேட்ட நந்தினி.. இன்றைய எதிர்நீச்சலில் என்ன?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (நவ.01) எபிசோடில் அப்பத்தா ஈஸ்வரியிடம் வந்து "ஜீவானந்தம் போன் ஆஃப் என வருகிறது. அவர் எங்கே இருக்கிறார் என தகவல் தெரியவில்லை. உனக்கு ஏதாவது தெரியுமா?" என கேட்க ஈஸ்வரி "எனக்கு எதுவும் தெரியாது" என சொல்லி விடுகிறாள்.
ஈஸ்வரிக்கு ஃபர்ஹானா போன் செய்து வீட்டு வாசலில் தான் இருக்கிறேன் கொஞ்சம் வெளியில் வாருங்கள் என அழைத்து வெண்பாவுக்கு அடிபட்டது பற்றியும் அவளை பார்த்து கொள்ளும் படியும் சொல்லி விட்டு ஈஸ்வரியிடம் வெண்பாவை ஒப்படைத்து செல்கிறாள். ஈஸ்வரி வெண்பாவை உள்ளே அழைத்து சென்றதை மறைந்து இருந்து பார்த்து விடுகிறாள் ஜான்சி ராணி.
கதிர் கௌதம் தன்னை அடைத்து வைத்து இருந்தது பற்றி குணசேகரனிடம் சொல்ல கதிர் எப்படி போய் கௌதமிடன் சிக்கினான் என்பதை பற்றி கரிகாலன் குணசேகரனிடம் வத்தி வைக்கிறான்.
வெண்பாவுடன் பெண்கள் அனைவரும் இருக்க அவர்கள் எங்கே என தேடி கொண்டு ரூமுக்கு வந்து விடுகிறாள் ஜான்சி ராணி. வேகவேகமாக ஐஸ்வர்யாவை படுக்க வைத்து வெண்பாவை மறைத்து வைக்கிறாள் ஈஸ்வரி. உள்ளே நுழைந்த ஜான்சி ராணி "ஏதோ ஒரு பிள்ளையை தூக்கிட்டு ஓடி வந்தியே யார் அது" என கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜான்சி ராணி விசாலாட்சி அம்மாவிடம் சென்று ஈஸ்வரி ஒரு பிள்ளையை தூக்கி கொண்டு வந்ததை பற்றி போய் வத்தி வைக்க விசாலாட்சி அம்மா ஈஸ்வரியிடம் வந்து " ஏதோ பிள்ளையை அழைச்சுக்கிட்டு வந்தீங்களாம் யார் அது?"என கேட்க அனைவரின் முகமும் மாறிவிடுகிறது.
குணசேகரனும் கதிரும் வளவனை ஒரு காட்டு பகுதியில் சென்று சந்திக்கிறார்கள். "அந்த ஜீவானந்தத்தை பத்தி உங்களுக்கு முழுசா தெரியல பாத்துக்கோ" என வளவன் குணசேகரனிடம் சொல்ல "அவன் வருவது என்னோட மண்ணுக்கு. அவன் மண்ணோட மண்ணா தான் போவானே தவிர ஊருக்கு திரும்ப மாட்டான்" என குணசேகரன் ஆவேச பட "நான் அவனை முடிச்சு காட்டுறேன் அண்ணன்" என கதிர் கொந்தளிக்கிறான். இவர்கள் மூவரும் பேசி கொண்டு இருப்பதை அந்த வழியாக வந்த நந்தினி பார்த்து விடுகிறாள்.
வளவனை பார்த்து "யார் இது புதுசா இருக்கு? என்ன பேசிகிட்டு இருக்கானுங்க" என நந்தினி நோட்டம் விட அவள் பார்த்ததை கதிர் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்டுக்கான ஹிண்ட்.