Ethirneechal : ஜனனியின் குடும்பத்துக்கு என்ன ஆச்சு? உமையாள் போட்ட திட்டம் என்ன? எதிர்நீச்சலில் ட்விஸ்ட்
Ethirneechal : ஜனனியின் அம்மாவையும் தங்கையையும் காணவில்லை. இதற்கு காரணம் உமையாளாக இருக்குமா? அஞ்சனா எழுதி வைத்திருந்த ஹிண்ட்டைப் பார்த்து அதிர்ச்சியில் ஜனனி.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தற்போது தர்ஷினியின் திருமணம் குறித்த கதைக்களம்தான் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனி குணசேகரனிடம் அஞ்சனா சித்தார்த் காதல் பற்றி நியாயம் கேட்க அதை பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் நக்கலாக பேசுகிறார் குணசேகரன். அதனால் கடுப்பான ஜனனி "இப்போவே என்னுடைய அம்மாவையும் தங்கச்சியையும் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்" என சொல்ல "அவங்க இருந்தாதானே?" என நக்கலாக உமையாள் சொல்ல "என்ன பண்ணுவீங்க?" என ஜனனி கேட்க "இப்போ இருந்தா தானேன்னு சொன்னேன்" என்கிறாள் உமையாள்.
அவள் அப்படி சொன்னதை கேட்டு ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். வேகவேகமாக அம்மா வீட்டுக்கு ஜனனியை அழைத்து செல்கிறான் சக்தி. கதிர் சக்தியிடம் சைகையில் எதையோ காட்ட, அதைப் பார்த்த தாரா "என்ன அப்பா ஏதாச்சு பிளான் இருக்கா" என அருகே வந்து கேட்க, அப்பாவும் மகளுடன் சிரித்து பேசி கொள்கிறார்கள்.
ஜனனி, தன் அம்மா வீட்டுக்கு சென்றுபார்த்தால் அங்கு யாருமே இல்லை. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜனனி கலங்குகிறாள். சக்தி ஏதாவது கிடைக்கிறதா என தேடி பார்க்கலாம் என சொல்லி எல்லா இடத்திலும் தேடுகிறான். அப்போது அங்கே ஒரு பேப்பரில் ஏதோ "SEE THE VIDEO" என ஆங்கிலத்தில் எழுதி இருந்ததை எடுத்து, ஜனனியிடம் காட்டி பார்க்க சொல்கிறான். ஜனனியும் அஞ்சனா சொன்னதுபோல வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதுதான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.
நேற்றைய எபிசோடில் குணசேகரனை பார்க்க உமையாள் குடும்பம் வருகிறார்கள். குலதெய்வ வழிபாடு பற்றி உமையாள் பேச, அவளின் கணவர் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது பற்றி சொல்கிறார். நிச்சயம் முடியும் வரையில் உமையாளையும் சித்தார்த்தையும் குணசேகரன் வீட்டிலேயே தங்க சொல்கிறார்.
ஈஸ்வரி வந்து உமையாளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி சொல்கிறார். ஆனால் குணசேகரன் ஈஸ்வரியை அவமானப்படுத்தி மிரட்டி அனுப்புகிறார். உமையாள் குணசேகரனை தனியாக அழைத்து சென்று பேசுகிறாள். "நிச்சயதார்த்தம் தானே என அவர்கள் பொறுமையாக இருக்கட்டும். அதற்குள் நாம கல்யாணத்தை முடித்துவிடலாம்" என உமையாள் பிளான் போட்டு குணசேகரனிடம் சம்மதம் கேட்கிறாள். இந்த உண்மை எனக்கும் உங்களுக்கும் மட்டும் இருக்கட்டும் என சொல்லும்போது குணசேகரன் தீவிரமாக யோசிக்கிறார். இதுதான் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடின் கதைக்களம்.