Ethirneechal: சவால் விடும் குணசேகரனை எதிர்க்கும் ஈஸ்வரி: நாச்சியப்பனுக்கு காத்திருந்த ஷாக்: எதிர்நீச்சலில் இன்று
Ethirneechal : மீண்டும் தர்ஷினி திருமணத்தை வைத்து பெரிய பிரச்சினை செய்யும் குணசேகரன். ஆனால் இந்த முறை மாப்பிள்ளை கரிகாலன் அல்ல? எதிர்நீச்சலில் காத்திருக்கும் பூகம்பம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் இத்தனை நாட்களாக கரிகாலனுக்கு தர்ஷினியை திருமணம் செய்து வைப்பது குறித்து கதைக்களம் நகர்த்தப்பட்டு வந்தது. குணசேகரனின் அடாவடியான நடவடிக்கைகளால் காயப்பட்ட தர்ஷினி திடீரென மர்ம நபர்களால் கடத்தப்பட்டாள். அந்தக் கடத்தல் நாடகத்தை நடத்தியதே குணசேகரன் தான் என்ற உண்மை ரசிகர்கள் யூகித்து வைத்து இருந்தாலும் அது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.
மனதளவில் பாதிக்கப்பட்டு பயத்தில் பித்து பிடித்தது போல இருக்கும் தர்ஷினியை எப்படியோ போலீஸ் மீட்டெடுத்தாலும் அவளால் இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப முடியவில்லை. அதற்குள் மீண்டும் கரிகாலனுடன் திருமணம் பற்றிய பேச்சவார்த்தையை எடுக்க கொந்தளித்த குணசேகரன் தம்பிகள் கரிகாலனை வீட்டைவிட்டே அடித்தே விரட்டிவிட்டனர்.
இந்த பிரச்சினை ஓய்வதற்குள் உமையாள் வந்து தர்ஷினியை தன்னுடைய மகனுக்கு சம்பந்தம் பேச குணசேகரன் பூரித்து போகிறார். ஆனால் ஈஸ்வரி அது நடக்கவே நடக்காது என உறுதியாக இருக்கிறாள். இப்படி ஒரு கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தர்ஷினியை உமையாள் மகனுக்கு கல்யாணம் செய்து வைப்பது பற்றின விவாதங்கள் குணசேகரன் வீட்டில் நடைபெற்று வருகிறது. "இந்தக் கரிகாலன் பயல மாப்பிள்ளையா கூட்டிட்டு வரது தானே பிரச்சினையா எல்லாரும் பேசுனீங்க" என குணசேகரன் சொல்ல "இந்த கல்யாணம் நடக்காது" என ஆணியில் அடித்தாற்போல் பட்டென குணசேகரனை எதிர்த்து பேசுகிறார்கள் நந்தினியும் ரேணுகாவும். "நாங்களும் இதில் உறுதியாக இருக்கிறோம்" எனக் கதிர் சொல்ல, கொந்தளிக்கிறார் குணசேகரன்.
"ஒரு அப்பனா இந்தக் கல்யாணத்தை நான் நடத்தி காட்டுவேன்" என குணசேகரன் சபதமிட "ஒரு அம்மாவா இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்தி காட்டுறேன்" என எதிர்க்கிறார்கள். ஈஸ்வரி சவால் விட்டதைப் பார்த்து சந்தோஷப்படுகிறான் கதிர்.
மறுபக்கம் உமையாள் தன்னுடைய மகனிடம் இந்தத் திருமணம் பற்றி பேச அவன் வேறு ஓரு பெண்ணை விரும்புவதைப் பற்றி தைரியமாக சொல்லிவிடுகிறான். "யாருடா அந்தப் பொண்ணு? வாயை திறந்து சொல்லுடா?" என ராமசாமியும் கிருஷ்ணாசாமியும் மிரட்டுகிறார்கள். அந்த நேரத்தில் ஜனனியும் சக்தியும் அஞ்சனாவை உமையாள் வீட்டுக்கு அழைத்துச் சென்று "இவ தான் அந்தப் பொண்ணு" என சொல்ல, நாச்சியப்பன் மற்றும் அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
அஞ்சனா நாச்சியப்பனின் மகள் என்பது தெரிந்து அங்கு என்ன பிரச்சினை வெடிக்கப் போகிறது? குணசேகரன் ஈஸ்வரி இடையே இருக்கும் இந்த சவாலில் ஜெயிக்கப் போவது யார்? என பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடர்.