Ethirneechal: குணசேகரன் கிடைச்சுட்டாரா?.. சாமியார் கொடுத்த ஷாக்..எதிர்நீச்சலில் நேற்று நடந்தது என்ன?
Ethirneechal Sep 23 episode: கதிருக்கும் ஞானத்திற்கும் குணசேகரன் இருக்கும் இடத்தை காட்டுகிறேன் என சொல்லி அழைத்து செல்கிறார் ஒரு சாமியார். விசாலாட்சி அம்மா மருமகள்களுக்கு போட்ட கண்டிஷன் என்ன?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் தாராவும் வெண்பாவும் நன்றாக பேசி கொள்கிறார்கள். அப்பத்தா வீட்டுக்கு வருகிறார். ஈஸ்வரியிடம் "யாரு அந்த பொண்ணு?" என கேட்கிறார். "ஈஸ்வரி அக்காவோட ப்ரெண்ட்டோட பொண்ணு. இனிமே நம்ம எல்லாரும் மியூச்சுவல் ப்ரெண்ட்ஸ்" என நந்தினி சொல்கிறாள். அப்பத்தாவுக்கு குழப்பமாக இருக்க நந்தினி ஒரு ஹிண்ட் கொடுக்கிறாள்.
"ஆனந்தமான ஜீவனுடைய பொண்ணு" என நந்தினி சொன்னதும் அதை புரிந்து கொண்ட அப்பத்தா வெண்பாவை அழைத்து பேசுகிறார். இவர்கள் பேசுவதை கரிகாலன் ஒட்டுக் கேட்பதை பார்த்த தர்ஷினி அருகில் இருந்த காய்கறி தண்ணியை எடுத்து ஜன்னல் வழியாக ஊற்ற கரிகாலன் மேலே அது பட்டு கீழே தடுமாறி விழுந்து விடுகிறான். அனைவரும் அவனை அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.
ஞானமும் கதிரும் பல இடங்களுக்கு சென்று குணசேகரனை பற்றி விசாரிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. "அண்ணன் வழக்கமாக செல்லும் அனைத்து இடத்திற்கும் சென்று பார்த்தாச்சு. அண்ணன் எங்கேயுமே இல்லை. என்ன செய்வது எங்கே போய் தேடுவது என புரியவில்லை" என புலம்புகிறார்கள். அப்போது அருகில் இருக்கும் கோயில் பக்கத்தில் போய் கேட்டு பார்க்கலாம் என அங்கே சென்று விசாரிக்கிறார்கள் ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அப்போது ஒரு சாமியார் வந்து கதிரையும், ஞானத்தையும் நிறுத்த அவர்கள் அதை பொருட்படுத்தாமல் செல்கிறார்கள். அப்போது அந்த சாமியார் "கதிரு நில்லுப்பா" என்கிறார். அதை கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "உங்களுக்கு எப்படி எங்களோட பெயர் தெரியும்?" என கேட்கிறான் ஞானம். "குணசேகரன் இருக்குற இடத்தை தெரிஞ்சுக்கணுமா வேணாமா?" என அந்த சாமியார் கேட்கிறார். "எங்க அண்ணன் இருக்குற இடம் உங்களுக்கு தெரியுமா? எங்க இருக்காரு சொல்லுங்க" என்கிறார்கள். "அப்போ என்னோட வாங்க" என சொல்லி விட்டு அவர் செல்ல அவர் பின்னாலேயே இருவரும் ஓடுகிறார்கள்.
அப்பத்தாவுடன் ரேணுகா, ஈஸ்வரி மற்றும் நந்தினி பேசி கொண்டு இருக்கிறார்கள். "குணசேகரனை எப்படியும் இன்னைக்கு ஞானமும், கதிரும் கண்டு பிடித்து விடுவார்கள் என என்னுடைய மனசுக்கு தோன்றுகிறது" என்கிறார் அப்பத்தா. "ஞானம் இதுவரையில் கொஞ்சமாவது நியாயம் தருமம் பற்றி யோசிப்பான் ஆனால் எப்போ அவன் பெயரில் சொத்து வந்ததோ அப்போவே அவன் குணசேகரன் தம்பியா முழுசா மாறிட்டான். இனிமே அவர்கள் இருவரும் குணசேகரன் தம்பிகளாக மட்டுமே இருப்பார்கள்" என்கிறார் அப்பத்தா. அதையும் ஒட்டுகேட்ட கரிகாலன் விசாலாட்சி அம்மாவை அழைத்து குணசேகரனுக்கு எதிரா இவர்கள் திட்டம் போடுகிறார்கள் என போட்டு கொடுக்கிறான்.
விசாலாட்சி அம்மா வந்து "இங்க பாருங்கடி நீங்க போட்ட ஆட்டத்தை எல்லாம் இத்தோடு நிறுத்திக்கங்க. வீட்டோட கிடக்குற வேலையை பாருங்க. நீங்க படிச்ச படிப்பை எல்லாம் மறந்துடுங்க. ஜனனி அந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அப்படியே இருங்க. என்னோட பிள்ளை இன்னிக்கு கிடைச்சுருவான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. பாருங்க நல்ல செய்தி வரும்" என்கிறார்.
கரிகாலனும் "பாருங்க மாமா வந்ததும் உங்க ஆட்டம் எல்லாம் க்ளோஸ்" என்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.