இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதற்குள் 'எதிர்நீச்சல் 2' சீரியலை விட்டு எகிறிய 4 பிரபலங்கள்!
'எதிர்நீச்சல்' தொடரின் 2ஆம் பாகம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த தொடரில் இருந்து 4 முக்கிய கதாபாத்திரங்கள் வெளியேறிவிட்டதால் அவர்கள் மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்:
சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த முக்கிய தொடர் எதிர்நீச்சல். இயக்குநர் திருசெல்வம் இயக்கத்தில் கனிகா, பிரியதர்ஷினி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த தொடர் முதல் முறையாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. 'எதிர்நீச்சல்' தொடர் டிஆர்பியிலும் சக்கை போடு போட்டது. இந்த நிலையில் தான் கடந்த ஜூன் 8ஆம் தேதியுடன் திடீர் என்ற இந்த சீரியலை முடித்து விட்டு இரண்டாம் பாகம் துவங்க போவதாக அறிவித்து, இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்டார் இயக்குனர் திருச்செல்வம்.
இந்த தொடரின் 2ஆம் பாகம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. எதிர்நீச்சல் தொடரின் 2ஆம் பாகமாக உருவாகும் இந்த தொடரில், கதாநாயகி முதல் இன்னும் சில பிரபலங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்நீச்சல் 2 சீரியல்:
அதன்படி ஏற்கனவே எதிர்நீச்சல் தொடரில் டிராவல் செய்த கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை ஆகியோர் எதிர்நீச்சல் 2ஆம் பாகத்திலும் நடிக்கின்றனர். ஆனால், முதல் பாகத்தில் ஜனனி, சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா 2 ஆவது பாகத்தில் இருந்து விலகி விட்டார். அவருக்குப் பதிலாக ஜனனி சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் பார்வதி வெங்கட்ராமன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜீ தமிழில் புது புது அர்த்தங்கள் சீரியலில் நடித்தவர். அதே போல் ஜீ தமிழ், எஸ் எஸ் மியூசிக் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 பிரபலங்கள் மாற்றம்:
இந்த சீரியலில் இருந்து விலகிய மதுமிதா, விஜய் டிவியில் துவங்க உள்ள அய்யனார் துணை என்ற தொடரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஆனால் இந்த சீரியலில் கமிட் ஆவதற்கு முன்பே சம்பள பிரச்சனை காரணமாக 'எதிர்நீச்சல் 2' சீரியலில் மதுமிதா விலகியதாக கூறப்படுகிறது. இதே போன்று ஆதிரைசெல்வி ஆதிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்த சத்யா தேவராஜனும் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம், அவர், விஜய் தொலைக்காட்சியில் தனம் என்ற தொடரில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டபட்டுள்ளார்.
மேலும், தாரா கதிர்வேல் கதாபாத்திரத்தில் நடித்த ஃபர்சானா அன்சாரியும் விலகிவிட்டார். தற்போது அவருக்குப் பதிலாக 2ஆவது பாகத்தில் பிரஜானா நடிக்கிறார். இதற்கு முன்னதாக எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாத நிலையில் 2ஆவது பாகத்தில் அவர் நடிக்கவில்லையாம். அவருக்குப் பதிலாக வேறொரு நடிகர் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
.
எது எப்படியோ புத்தம் புதிய புதுப்பொலிவுடன் எதிர்நீச்சல் 2 தொடர் ஒளிபரப்பாக உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதியில் இருந்து திங்கள் முதல் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.