Siragadikka Aasai Serial: உப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட சொல்லும் விஜயா..கடுப்பில் ரோகிணி - சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai Today Episode Written Update April 25: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.
”மீனா, ரோகிணிக்கு என்ன பிடிக்குமோ அதை செய்” என விஜயா சொல்கிறார். ”அப்பா, அம்மா சொன்னதை அவங்களே மறந்துட்டாங்க போல. பார்லர் அம்மா கையாலயே சமச்சி தானே சாப்டணுனு சொன்னாங்க. அவங்க அப்பா ஜெயில்ல இருந்து வெளியே வரணும்னா இதெல்லாம் செஞ்சி தானே ஆகணும்” என்று முத்து சொல்கிறார். ”அப்றம் எப்டி பரிகாரம் செஞ்சதுக்கு ஒரு பவர் கிடைக்கும், பலன் கிடைக்கும்” என்றும் சொல்கிறார். ”நீங்க ஏன் இப்போ சாமியார் மாதிரி பேசிக்கிட்டு இருக்கிங்க” என ரோகிணி கேட்கிறார்.
"நான் நல்லதுக்கு சொன்னாலும் இங்க இருக்க சில பேருக்கு தாப்பா தான் தோணுது அதுக்கப்புறம் உங்க இஷ்டம்பா" என்று சொல்லி விட்டு முத்து அங்கிருந்து செல்கிறார். பின் மீனாவை சமைக்க வேண்டாம் என சொல்லி விட்டு, விஜயா ரோகிணியை சமைக்க சொல்லுகிறார். பின் மீனா கோலம் போட செல்கிறார். ஆனால் விஜயா மீனாவை கோலம் போட வேண்டாம் என சொல்லி விட்டு ரோகிணியை கூட்டி வந்து கோலம் போட சொல்கிறார். ரோகிணியும், மனோஜூம் சேர்த்து கோலம் போடுகின்றனர். ஸ்ருதியும் ரவியும் மீனாவின் சமையலைப் புகழ்கின்றனர்.
அப்போது விஜயா "வீடு வீடா போய்ட்டு சாப்பாடையும் விக்க சொல்லு" என்று சொல்கிறார். ரோகிணி சாப்பிட ஆரம்பிக்கிறார். அப்போது முத்து வந்து "ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப் பார்லர் அம்மா ஏன் சாப்டுது.. அதான் விரதம் இருக்கு இல்ல" என்று முத்து சொல்கிறார். யெஸ் ”டேஸ்ட்டே இல்லாம சாப்டணுனு சொல்லி இருக்காங்க இல்ல” என்று ஸ்ருதி சொல்கிறார். ”சாமி குத்தம் ஆயிடக்கூடாதுனு நான் சொன்னேன் பா” என்று முத்து சொல்கிறார். உடனே விஜயா ”ரோகிணி நீ எந்திரி” என சொல்கிறார். ”புருஷன் பொண்டாட்டினா எல்லாத்துலயும் சரிப்பாதினு தெரியாது, இவன் மட்டும் எப்டி சாப்பிடலாம்?” என்று முத்து கேட்கிறார்.
”சாப்பிடட்டும் விடுடா” என்று அண்ணாமலை சொல்கிறார். விஜயா மனோஜிடம் இருந்து தட்டை பிடுங்குகிறார். முத்து மீனாவிடம் ”மசாலா செம டேஸ்ட்டா இருக்கு” என்று சொல்கிறார். ஜீவா அந்த ட்ராவல் ஏஜென்சிக்கு செல்கிறார். அப்போது அங்கு இருப்பவர் ”உங்கள கேட்டு ரெண்டு பேரு வந்தாங்க” என்று சொல்கிறார். ”நான் சென்னைக்கு வந்து இருக்குறத சொல்லிட்டிங்களா? ” என்று ஜீவா கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.