Siragadikka Aasai Serial:மீனாவை அதிகாரம் செய்யும் விஜயா..முத்துவின் சிறப்பான செயல் : சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai Today Episode Written Update April 20 :சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
"இதெல்லாம் ஒரு கஷ்டம் இல்ல மீனா. எவ்ளோ பெரிய கஷ்டம், நம்பிக்கை துரோகம் இதையெல்லாம் தாண்டி தான் வந்து இருக்கேன். கடை போனா நம்ம அப்டியே அடங்கி ஒடுங்கி உட்கார்ந்துடுவோம்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க" என்று முத்து சொல்கிறார். பின் மீனாவை சாப்பிட வைக்கிறார். விஜயா ரோகிணியிடம் "மீனா எங்க காபி போட்டு குடுத்தாளா?" என கேட்கிறார். இல்ல ஆண்டி என ரோகிணி சொல்கிறார்.
"இவ்ளோ நேரம் ஆயிடுச்சி யாரும் ஒரு வாய் காபி குடிக்கல. இப்போ தான் ஆடி அசஞ்சி ஒய்யாரமா வர" என விஜயா மீனாவிடம் கேட்கிறார். ”இன்னைக்கு ஒருநாள் யாரும் காபி போட்டு குடிச்சிக்க மாட்டாங்களா?” என மீனா கேட்கிறார். ”ஏன் வீட்ல இருக்க எல்லா வேலையும் நானே செஞ்சிடுறேன். நீ கால் மேல காலு போட்டு உட்கார்ந்துக்குறியா?” என விஜயா கேட்கிறார். ”நானே கடை போய்டுசேனு கவலையில இருக்கேன்” என்கிறார் மீனா. ”யாரோ ஒரு புண்ணியவான் நமக்கு நல்லது பண்ணானு நெனச்சிக்க வேண்டியதுதான்” என்று விஜயா சொல்கிறார்.
”ஏன் அந்த பார்லர் அம்மா என்ன கையில மருதாணி வச்சிருக்கா? எங்க அந்த பலக்குரலு" என முத்து கேட்கிறார். மீனாவை வேலை செய்ய வேண்டாம் என்று முத்து சொல்கிறார். பின் மீனா ”அத்தை சொல்றது சரிதானே எனக்கு தான் இப்போ எந்த வருமானமும் இல்லையே” என்று சொல்கிறார். முத்து தன் நண்பர்களிடம் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். ”வெளியே இருந்தவங்க யாரும் பண்ணா மாதிரி தெரியல. எங்க வீட்ல இருக்கவங்க தான் யாரோ இந்த வேலையை பார்த்து இருக்காங்களோனு டவுட்டா இருக்கு. அது ஒரு நாளைக்கு தெரிய வரும். அப்போ பார்த்துக்கலாம்” என முத்து சொல்கிறார்.
பின் முத்துவிடம் நண்பர் ஆன்லைன் விற்பனை குறித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போது முத்துவுக்கு ஒரு யோசனை வருகிறது. பின் மீனாவுக்காக ஸ்கூட்டி ஒன்றை வாங்க மீனாவுக்கு கால் பண்ணி ”உனக்கு பிடிச்ச கலர் என்ன” என்று கேட்கிறார். மீனா சாம்பல் கலர் என்று சொல்கிறார். முத்து அண்ணாமலைக்கு கால் பண்ணி ”கீழே வாங்கப்பா” என கூப்பிடுகிறார். பின் வீட்டில் உள்ள அனைவரையும் கீழே வர சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.